புங்குடுதீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்! தமிழக மீனவர் ஒருவருடையதா?
புங்குடுதீவிற்கும் மண்டைதீவிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலமொன்று நேற்று மாலை ஊர்காவற்றுறை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காண முடியாதளவில் மிகவும் தேசமடைந்துள்ளதுடன் பச்சை நிறத்தில் ஆண்களுக்கான உள்ளாடை சடலத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தற்போது ஊர்காவற்றுறை பொலிஸாரின் கண்காணிப்புடன் பிரதேச வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்திலிருந்து றோலர் படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களைக் காணவில்லையென நெடுந்தீவு கடற்றொழிலாளர் சமாசத்திற்கும் கடற்படைக்கும் இந்திய தூதரகம் தெரியப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெள்ளைக் கொடியணிந்து இந்திய இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்றை கடலில் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment