Wednesday, April 6, 2011

இறுப்பிட்டி பகுதியில் பாரிய பெருக்குமரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தீவு, நயினாதீவு ஆகிய இடங்களிலுள்ள மக்கள் தமது பயணத்தை மேற்கொள்ளும் பிரதான பாதையில் புங்குடுதீவு அமைந்துள்ளது.

இங்குள்ள பிரதான வீதியில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது. தற் போதைய நிலையில் புங்குடுதீவு ஒரு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறிவருகிறது. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாத நிலை காணப்படுகின்றது .

இவற்றை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு,புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என பல கதைகள் வெளிப்படுகின்ற போதும் அதனை நடைமுறைப்படுத்த எவரும் இதுவரை முன்வரவில்லை . இவ்வாறான நிலையில் புங்குடுதீவில் இரு புராதன இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இங்கு மிகப் பெரிய பெருக்குமரம் ஒன்று இறுப்பிட்டிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இறுப்பிட்டி சித்திவிநாயகர் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள ஒழுங்கைக்குள் இம்மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வந்தபோது அவர்கள் கொண்டு வந்த குதிரைகளுக்கு உணவு போடுவதற்காக இந்த பெருக்குமரம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப் படுகின்றது. இவை கிட்டத்தட்ட 400 வருடங் கள் பழமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெருக்குமரத்தின் இலைகளை உள்ளூரிலுள்ள விலங்குகள் உண்பதில்லை என்பதால் இம்மரம் மிகப் பெரிதாக வளர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.இவை இலங்கையில் மன்னார்,நெடுந்தீவு ஆகிய இடங்களிலேயே காணப்படுவதாக முதலில் கூறப்பட்டபோதும் தற்போது அது புங்குடுதீவுப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

இதைவிட புங்குடுதீவின் புராதன சின்ன மான வெளிச்சவீடும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இவ் வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதி யில் கடற்படையினரின் முகாம் நீண்ட கால மாகக் காணப்பட்டதால் அப் பகுதிக்கு மக்கள் செல்வதில்லை. ஆனால் தற்போது அப் பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறியுள்ள நிலை யில் வெளிச்சவீட்டின் புனரமைப்புப் பணிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தி லுள்ள கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.வெளிச்சவீட்டுக்கு அண்மையாகவுள்ள கிணற்றுக்குள் பழைமைவாய்ந்த காஸ் சிலிண்டர் ஒன்றும் காணப்படுகின்றது.பெருக்குமரம் மற்றும் வெளிச்சவீட்டுப் பகுதிகளை வேலணைப் பிரதேச செயலக நந்தகோபாலன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவற்றை உல்லாசப் பயணிகள் பார்வையிடுவதற்கு ஏற்றவகையில் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. இவற்றின் புனரமைப்பு மற்றும் புங்குடுதீவின் அபிவிருத்தி என்பன அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கும் என்பதால் உரிய தரப்பினர் புங்குடுதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP