Tuesday, April 5, 2011

புங்குடுதீவு மண்ணின் கலைஞன் நாகராசா செல்வகுமாரின் தொலக்காட்சி நாடகம் தமிழக தேர்தலுக்காக கப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு.


தமிழக தேர்தலையொட்டி எமது இன அழிப்புக்கு துணை போன கலைஞரை எதிர்த்து செய்யப்படும் பிரசாரங்களுக்காக விஜயகாந்தின் கப்டன் தொலக்காட்சியில் ´´மூடுதிரை´´ எனும் ஐரோப்பிய வளரி தொலைக்காட்சியின் நாடகம் அடிக்கடி ஒளிபரப்பாகி வருகின்றது .
சுதன்ராஜ் இன் இயக்கத்தில் மகிந்த ராஜபக்சவை பேட்டி காண்பது போன்ற அற்புதமான கதை வசனம் ,சிறந்த நடிப்பில் உருவான இந்த மூடுதிரையில் மகிந்தவாக புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த பாரிஸ் வாழ் கலைஞன் நாகராசா செல்வகுமார் நடித்துள்ளார் ,இவர் இந்த நாடகத்தில் பொருத்தமான பாத்திரதோற்றதையும் உரையாடும் விதத்தையும் கொண்டுள்ளமை சிறப்பானது .புலத்துசங்கதிகள் என்ற தொடர் மூலம் பிரபலமான இந்த கலைஞனின் நாடகம் மூலம் எமது வரலாறு தமிழகத்தில் எழுதப்படுள்ளது2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது.சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது.
வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற சுதன்ராஜ் அவர்களினால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்த மூடுதிரை நிகழ்ச்சியில் மகிந்தர் வேடமேற்று நடிந்திருந்தவர் கலைஞர் செல்வகுமார்.
இதுவரை காலமும் தமிழகத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே ஈழத் தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாக்கி வந்த நிலையில் முதன்முறையாக ஈழத்தமிழர் நிகழ்ச்சியொன்றை தமிழகத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றமை இதுவே முதன்முறை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP