Tuesday, March 29, 2011

ஈழத்து எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸ் பற்றி ...

தம்பிஐயா தேவதாஸ் (பி. ஏப்ரல் 24, 1951,புங்குடுதீவு யாழ்ப்பாணம்) மொழிபெயர்ப்பு மற்றும் திரைப்படத் துறைகளில் பங்களித்து வரும் ஈழத்து எழுத்தாளராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தில் தம்பிஐயா - ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வராகப் பிறந்த இவர் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இப்பொழுது கொழும்பு கணபதி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராகவும், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், இலங்கைத் தேசிய தொலைக்காட்சியில் நேர்காண்பவராகவும், கொழும்பு பல்கலைக்கழக பத்திரிகைத்துறையில் வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார்.

ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார்.

இவருடைய ஆக்கங்கள்

மொழிபெயர்ப்பு நாவல்கள்
நெஞ்சில் ஓர் இரகசியம் (1975)
இறைவன் வருத்த வழி (1976)
மூன்று பாத்திரங்கள் (1977)

சினிமா தொடர்பான நூல்கள்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994,2000)
பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999)
இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001)

பிற நூல்கள்
தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் (1998)
சிங்களப் பழமொழிகள் (2005)
புங்குடுதீவு வாழ்வும் வளமும் (2006)

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP