Sunday, March 20, 2011

யாழ் புங்குடுதீவு சிறி சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி !!

யாழ் புங்குடுதீவு சிறி சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த 15.2.2011 பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் நா.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவகக் கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன் கொண்டார் .

விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.


வினோத உடைப் போட்டி உட்பட தடகள போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வேலணைக் கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் கு. சரவணபவானந்தன் ஓய்வு பெற்ற அதிபர்களான தர்மகுணசிங்கம் செல்வி ம.சுப்பிரமணியம்,ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP