புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயத்துக்கு புதிய நுழைவாயில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது .
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில் புதிதாக அமைக்கபப்டு கொடுக்கப் பட்டுள்ளது.இந்த அரிய பணியை சுவிசில் வசிக்கும் இராசமாணிக்கம் குடும்பத்தினரால் (சாயி ரெடேர்ஸ்) முழுதுமாக செய்து கொடுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.இதற்கான நிதி புங்குடுதீவு மக்கள் விழி புணர்வு ஒன்றிய தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் மற்றும் அவரது சகோதரர்களினால் வழங்கப் பட்டுள்ளது .இந்த பாடசாலையின் புதிய அழகிய தோற்றத்தினை நிழல் படங்களாக இங்கே தந்துள்ளோம் .
இத்தகைய அரிய பணியை செய்யும் எம்மூர் புலத்து மக்களை www.pungudutivu.info சார்பில் நாம் மனதார வாழ்த்துகின்றோம் !!
படம்,செய்தி : புங்குடுதீவுசுவிஸ்
......................................................................................................................
0 comments:
Post a Comment