செல்வி ரேணுகா பிள்ளைநாயகம்.
புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட ரேணுகா பிள்ளைநாயகம் அவர்கள் 14.03.2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.
எங்கள் குடும்பத்தின் பாசமான செல்லப்பிள்ளை, எங்களை துயரத்தில் விட்டுவிட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டாள். அவள் நினைவுகள் என்றென்றும் எங்களை விட்டு பிரியாது.
அன்னார், பிள்ளைநாயகம், தவமணிதேவி, நாகேஸ்வரி(சின்னமணி) அவர்களின் செல்ல மகளும்,
காலஞ்சென்ற சுப்பையா(செல்லரப்பா), மாரிமுத்தாச்சி தம்பதியினரின் பூட்டியும்,
சந்திரகலா(ரஜனி), ரமேஸ், ராதிகா, சுரேஷ், சதீஸ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விபுல், மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜித்தின் அவர்களின் அன்பு சித்தியும், அட்சயா அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 15-03-2011 செவ்வாய்கிழமை அன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சகோதரர்கள் — இலங்கை
தொலைபேசி: +94213207602
செல்லிடப்பேசி: +94774010690
- — பிரித்தானியா
தொலைபேசி: +447897835759
செல்லிடப்பேசி: +447908554484
0 comments:
Post a Comment