Sunday, March 13, 2011

திரு சண்முகநாதன் சபானந்தன்.

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கன்னிமார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சபானந்தன் அவர்கள் 10-03-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முத்தையா, இராசம்மா கந்தையா அம்மணிப்பிள்ளை ஆகியோரின் மூத்த பேரனும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், மற்றும் சிவஞானம்(சித்து) ஆகியோரின் அன்புமகனும்,

வைத்திலிங்கம் - மருதமணி, செல்வராசா, கமலம் வைரமுத்து, இரத்தினம் - சிவசெம்பு, குணமணி, தர்மலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,

தனலெட்சுமி(பிரான்ஸ்), புஸ்பமாலா(பிரான்ஸ் - புங்குடுதீவு ப.நோ.சங்க முகாமையாளர்), ஜீவமாலா(இலங்கை), திருப்பதிராசா(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிவநாதன், கிருஷ்ணகாந்தன், விசயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சா, வர்ணன்(லண்டன்), சஜிதா பிறேம், நுயன், சிவோ, லூர்திகா(பிரான்ஸ்), விதுசன், விநோஜன், விதுசிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-03-2011 திங்கட்கிழமை அன்று கொழும்பு ஜெயரட்ண மலர்சாலை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
தாய், சகோதரங்கள், பெறாமக்கள்.
தொடர்புகளுக்கு
சிவநாதன் - தனலெட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33561623420
கிருஷ்ணகாந்தன் புஸ்பமாலா — பிரான்ஸ்
தொலைபேசி: +33567167601
விசயகுமார் - ஜீவமாலா — இலங்கை
தொலைபேசி: +94114361115
செல்லிடப்பேசி: +94777399083

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP