புங்குடுதீவு என்னும் புனைப்பெயர்
புங்குடுதீவு என்று ஒரு பெயர் வரக் காரணம் என்னவாக கருதப்படுகிறது என்று நோக்குவோமாயின், எம் ஊரின் பெயரைப்பற்றி பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன.
அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர் இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
புங்குடுதீவு என்ற பெயர் வரக் காரணம் பலவாறு சித்தரிக்கப்படுகின்றது இருந்தும், எம் உறவுகளே, நீங்கள் கேட்டும்,அறிந்தும்,ஆராய்ந்தும்,தெரிந்த காரணங்கள் பல இருப்பினும் எங்களுக்கு அறியத்தாருங்கள், நாமும் எம் தளத்தினூடாக எம் ஊரின் புகழையும், வளர்ச்சியையும் உலகத்திற்க்கு தெரிவிப்போமாக !
0 comments:
Post a Comment