புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரராஜசிங்கம் அவர்கள் 24.01.2011 திங்கட்கிழமை அன்று காலமானார்;
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தனபாலசுந்தரம்(பிரான்ஸ்), ஜெயலீலா(பிரான்ஸ்), விஜயபாலன்(இலங்கை), உதயபாலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாரதாதேவி(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), கலாராணி(இலங்கை), கயல்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, அமிர்தலிங்கம், துரைச்சாமி, கற்பகம் மற்றும் தம்பிராசா ஆகியோரின் ஆசைத் தம்பியும்,
காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் அமராவதி, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சுதன்(பிரான்ஸ்), நீருஜா(பிரான்ஸ்), கீர்த்தனன்(இலங்கை), அபிரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் 24.01.2011 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக்கிரிகைக்காக செம்மணி இந்து மயானத்தில் எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
0 comments:
Post a Comment