நகைகள் இருக்கும் இடத்தை காட்டுமாறு கொள்ளையர்கள், வயோதிப தம்பதி மீது தாக்குதல்! புங்குடுதீவில் சம்பவம்
புங்குடுதீவில் கொள்ளையில் ஈடுபடச்சென்றவர்கள் அங்கு நகைகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த வயோதிப தம்பதியினரைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டுச்சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த புங்குடு தீவு 10 ஆம் வட்டாரம், ஆலடியைச் சேர்ந்த கே.சுவாமிநாதன் (வயது72), அவரது மனைவி சு.வரதலட்சுமி (வயது65) ஆகியோர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தம்பதியரின் வீட்டுக்குள் அலவாங்குகள்,பொல்லுகளுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவரையும் மிரட்டி நகைகளைத் தருமாறு கோரியுள்ளனர்.
எம்மிடம் நகைகள் இல்லை நாளை கொழும்பு செல்வதற்காக 5 ஆயிரம் ரூபா மட்டும் வைத்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
பணத்தை எடுத்த அந்த ஆயுதக் குழுவினர் நகைகள் வைத்திருக்கும் இடத்தைக் காட்டுமாறு கூறினர்.
நகைகள் இல்லை என அவர்கள் திரும்பவும் கூறவே வயோதிபப் பெண்ணின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்தனர். கணவனை அலவாங்கால் தாக்கினர்.
இருவரும் மயக்கமடையவே கொள்ளையர்கள் கோஷ்டி தப்பிச்சென்றுவிட்டது. அதன் பின்னர் அயலவர்கள் காயமடைந்த இருவரையும் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
0 comments:
Post a Comment