Sunday, January 2, 2011

மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .

பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் ஆண்டின் முதலாவது தவணையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு மகளிர் அபிவிருத்தி நிலையம் ஒவ்வொரு வருடமும் அப்பியாசக் கொப்பிகள்,பேனாக்கள் போள்றவற்றை வழங்கி மாணவர் கல்வியைத் தொடர ஊக்குவிப்பது வழக்கம்.

இன்று மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்து மேலும் தமது பல வசதிகளை இழந்த நிலையில், கல்வி கற்கும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான மாணவர்கள் கல்வியைத் தளராது தொடர நாம் வழங்கும் இச் சேவை அவர்களுக்கு உதவியாக அமையும். இத் திட்டத்தில் வேலணை, புங்குடுதீவு,ஊர்காவற்துறை, சரவணை, நாரந்தணை, எழுவைதீவு, அனலதீவு, செட்டிப்புலம், துறையூர், தம்பாட்டி ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் இம்முறை தெரிவுசெய்யப்பட்டன.

முதலாம் நாள் நிகழ்வில் (25.01.2011)வேலணை ,சரவணை ,நாரந்தணை ஆகிய பிரதேச பாடசாலைகளாகிய வேலணை கிழக்கு ம.வி, செட்டிப்புலம் அ.த.க , வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம் ,வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் ,நாரந்தணை கணேச வித்தியாலயம் ,நாரந்தணை றோ.க ம.வி ,சரவணை நாகேஸ்வரி ம.வி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கும், 26.01.2011 புங்குடுதீவு, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசற்களைச் சேர்ந்த புங்குடுதீவு ம.வி , புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம் , புங்குடுதீவு ஸ்ரீ கணேச ம.வி, புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணியம் மகளிர் வித்தியாலயம், எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம் , எழுவைதீவு றோ.க.த.க வித்தியாலயம், கரம்பொன் சண்முகநாத ம.வி , சிறியபுஸ்ப மகளிர் ம.வி , சரவணை சின்னமடு றோ.க.த.க பாடசாலை, தம்பாட்டி அ.த.க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கும் கொப்பிகள் ,பேனா போன்றவை வழங்கப்பட்டன.

இவற்றை மகளிர் அபிவிருத்தி நிலையம் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று அதிபர்களின் தலைமையில் வழங்கியது. பாடசாலை அதிபர்கள் தகுதியான மாணவர்களை தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன், நிலைய திட்ட அலுவலர்கள் நிஷானா , நகுலேஸ்வரி , சர்மிளா ஆகியோர் கலந்துகொண்டதோடு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கல்விசார் உபகரணங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகளிர் அபிவிருத்தி நிலையத்திற்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு தாம் கல்வியில் முன்னேறுவோம் என உறுதியளித்தனர்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP