புங்குடுதீவு தற்போது இராணுவத்தினர் வசம்: கடற்படையினரிடமிருந்து நான்கு தீவுகள் பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் பிரதான தீவுகளின் பாதுகாப்புப் பொறுப்பை இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் தற்போதைக்கு கடற்படையினரின் பொறுப்பில் இருந்த நான்கு தீவுகள் இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புங்குடுதீவு,ஊர்காவற்துறை, மண்டைத்தீவு,காரைநகர் என்பனவே அவையாகும்.
மேற்குறித்த நான்கு தீவுகளினதும் பாதுகாப்புப் பொறுப்பை எதிர்வரும் காலங்களில் இராணுவத்தினர் மேற்பார்வை செய்வார்கள் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
ஆயினும் தற்போதைக்கு கடற்படையினரின் பொறுப்பில் இருக்கும் நெடுந்தீவு குறித்து இன்னும் எதுவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment