Tuesday, December 21, 2010

பூகம்பமான புங்குடுதீவு! பாழடைந்த கிணற்றுக்குள் யுவதியின் சடலம்

பூகம்பமான புங்குடுதீவு! பாழடைந்த கிணற்றுக்குள் தம்முடைய அராஜகத்தை மறைக்க முயன்ற கடற்படை.

திறந்த வெளிச் சிறைச்சாலையாகவுள்ள யாழ். குடாநாட்டில் அரச படையினரின் அட்டூழியங்களும்இ அராஜகங்களும் மற்றும் காட்டுமிராண்டித்தனங்களும் கட்டுக்கடங்காமல் நீண்டுகொண்டே போகின்றன.

1995 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டி னைப் படையினர் கைப்பற்றியதன் பின்னர் பல நூற்றுக்கணக்கான பெண்கள் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் நான்கு இளம் பெண்கள் காம வெறி கொண்ட மிருகப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமிஇ ரஜினிஇ சாரதாம்பாள் பட்டியலில் கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புங்குடுதீவு மடத்தடியைச் சேர்ந்த 20 வயதுடைய இளயதம்பி தர்மினி என பாலியல் கோரச் சம்பவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு 7 ஆம் வட்டாரத்தில் ஊரைதீவுஇ வரதீவில் மிகவும் வறிய குடும்பத்தில் இளையதம்பி இரத்தினபூபதி தம்பதியருக்கு கடைசி மகளாகப் பிறந்த தர்மினி தனது ஆரம்பக் கல்வியினை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாசாலையில் பயின்றார். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற இவர் உயர் கல்வியைப் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் பயின்றார்.

இரண்டு பெண் சகோதரிகளுடன் பிறந்த தர்மினி தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் குடும்ப வறுமையைப் போக்கும் பொருட்டு தையல் பயிற்சிகளையும் மேற்கொண்டு தமது வறுமை நிலையைப் போக்க அரும்பாடு பட்டு வந்தார்.

1990 ஆம் ஆண்டு தீவுப் பகுதியினை அரச படையினர் கைப்பற்றியதன் பின்னர் இன்று வரை அங்கு வாழ்ந்து வரும் மக்கள் அடிமை மனிதர் போலவே நடத்தப்பட்டு வருகின்றனர். அங்கு வாழும் பெரும்பாலான இளம் பெண்களை பாலியல் ரீதியாக கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாகப் பல தடவைகள் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடற்படையினருக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தினர். 1995 ஆம் ஆண்டு முழுக் குடாநாடும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின் தீவுப் பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்குமென தொடர்புகள் அப்போதுதான் ஏற்பட்டன. இதனால் அங்கு நடக்கும் சம்பவங்கள் ஊடகங்கள் ஊடாக சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்பட்டன. இதனால் கொதிப்படைந்த கடற்படை பல தடவைகள் இரவு வேளைகளில் சென்று பொது மக்களைத் தாக்கியும் உள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக கடற்படையின் அராஜகங்களை வெளிப்படுத்திய இளைஞர் ஒருவர் கடந்த மாதம் ஊர்காவற்றுறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவ்வாறு புங்குடுதீவு உட்பட தீவின் பல பகுதிகளையும் அடிமை நிலைக்கு கொண்டுவந்து ஆட்சி நடத்தி வரும் கடற்படையும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் சாரதாம்பாள் பட்டியலில் தர்மினியையும் மிகக் கொடூரமாகக் கொலை செய்து கிணற்றில் போட்டபோதும்இ அப்பகுதி மக்களின் துணிகரச் செயலால் இச் சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.

இனி இச்சம்பவம் பற்றி நோக்குவோம். தர்மினியின் இரு பெண் சகோதரிகளும் திருமணமான நிலையில் வீட்டில் தாயாரும் தர்மினியும் வசித்து வந்தனர். இதனால்இ இரு பெண்களும் இரவில் தனிமையில் நிற்பது பாதுகாப்பில்லையெனக் கருதி தாயார் தர்மினியின் மாமன் வீட்டில் இரவில் சென்று தங்கி வந்தனர்.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தர்மினி மாமனார் வீட்டில் இரவில் தங்கி காலையில் வீடு வருவது வழமை. இவர் மாமனார் வீட்டிற்குச் செல்லும் பிரதான வீதியிலேயே புங்குடுதீவுக் கடற்படையின் பிரிகேட் முகாம் அமைந்துள்ளது. இப் பாதையின் ஊடாகச் செல்லும்போது கடற்படையினர் இவருக்கு பல பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டனர்.

இதனால் இவர் கடற்படையினரை பல முறை திட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த 16 ஆம் திகதி இரவு 7 மணியளவில் தர்மினி மாமனார் வீட்டிற்கு செல்வதாக தாயாரிடம் கூறிச் சென்றார். இதுவே தாயாரிடம் இவர் கூறிய இறுதிச் சொல்லாகும். தர்மினி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நிமிடத்திலேயே இவர் காணாமற்போயுள்ளார்.

கடற்படையின் பிரதான முகாம் அமைந்துள்ள சுற்றுப் புறங்களில் உள்ள பொது மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ளதால் இப்பகுதி வீடுகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதுவே காமவெறி கொண்ட கடற்படைக்கு சாதகமாக அமைந்தது.

தர்மினியின் வருகைக்காக காத்திருந்த கடற்படையினர் இவரை தந்திரோபாயமாக வாய்க்குள் துணியை திணித்து அருகிலுள்ள பாழடைந்த வீட்டிற்கு தூக்கிச் சென்று தமது காம வெறியை தீர்த்துக் கொண்டனர். கைகள்இ கால்கள் என்பவற்றினை கயிற்றினால் கட்டிய பின்னரே இவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இவரின் கைஇ கால்களில் உள்ள அடையாளங்கள் நிரூபித்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒன்றுக்கு மேற்பட்ட கடற்படையினர் இப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளமையை தர்மினியின் மருத்துவ அறிக்கையிலிருந்து அறிய முடிகின்றது.

இவரின் உள்ளாடைகள் அனைத்தும் கிழிக்கப்பட்டும்இ உடல் முழுவதும் நகக் கீறல்களும் காணப்பட்டதுடன்இ இவரின் ஒரு மார்பகம் மிகவும் கடி காயங்களுக்குள்ளாக்கப்பட்டு��
�்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மிகவும் கொடூரமான பாலியல் பலாத்காரம் புரிந்த கடற்படையினர் இவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமை மருத்துவ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட தர்மினியை அதிகாலையிலேயே கடற்படையினர் கிணற்றில் வீசியிருக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தர்மினியைக் கொலைசெய்த கடற்படையினர் குறித்த வீட்டிலுள்ள பாழடைந்த கிணற்றின் படிக்கல்லினை உடைத்து கயிற்றினால் இவரின் இடுப்புடன் சேர்த்து இறுகக் கட்டிய பின்னர் சடலத்தை கிணற்றினுள் தூக்கி வீசியுள்ளனர். இவ்வாறு உலகிற்கு தமது அராஜகத்தை வெளிக்காட்டாமல் மறைக்கும் நோக்குடன் கடற்படையினர் செயற்பட்டனர்.

மறுநாட் காலை தர்மினி வீடு திரும்பாததை அறிந்த உறவினர் இவரைத் தேட ஆரம்பித்தனர். பல இடங்களிலும் தேடி இவரைக் காணாத உறவினர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையம்இ புங்குடுதீவுக் கடற்படை முகாம் ஆகியவற்றுக்குச் சென்று முறையிட்டனர். எனினும் இது விடயத்தில் தமக்கு ஒன்றும் தெரியாதெனவும் குறிப்பிட்ட பெண் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாமெனவும் கடற்படையினர் உறவினரிடம் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் கொண்ட உறவினர்கள் கடற்படையின் பிரதான முகாம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளைத் தேடியபோதுஇ கடற்படையினரின் சப்பாத்து அடையாளங்களை முதலில் கண்டனர். அதன் பின் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய வேளை தர்மினி அணிந்திருந்த செருப்பொன்றை கண்டுபிடித்தனர். மேலும் பொது மக்கள்இ உறவினர்கள் பலரையும் சேர்த்துக்கொண்டு குறித்த பாழடைந்த வீட்டினை சல்லடை போட்டபோதுஇ கடற்படை இவர்களை இப்பகுதிக்கு வரவிடாது விரட்டினர். எனினும்இ மக்கள் விடாது அங்கு தேடியபோது குறித்த வீட்டின் கிணற்றிலுள்ள படிக்கல் ஒன்று உடைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அதன் அருகே கடற்படையின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியையும் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான மக்கள் கிணற்றினை எட்டிப் பார்த்தபோது தர்மினியின் தலைமுடி தென்பட்டது.

அதையடுத்து அங்கு திரண்ட மக்கள் கிணற்றினுள் குறித்த பெண்ணின் உயிரற்ற உடம்பினை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கடற்படையினராலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென்பதை அறிந்த மக்கள் அப்பகுதியில் பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.

கடற்படையின் புங்குடுதீவு முகாமை அங்கிருந்து அகற்றினால் மட்டுமே சடலத்தை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்போமென போராட்டத்தில் அம் மக்கள் ஈடுபட்டனர். இவர்களை விரட்டியடிக்க கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தடியடிஇ கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டு மக்களைக் கலைக்க முற்பட்டனர்.

எனினும் இதற்கு அடங்காத மக்களை கண்டபடி சுட்டுக் கலைத்தனர். இதனால் ஒரு இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பல பொது மக்கள் அடிகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஆத்திரம் கொண்ட மக்கள் கடற்படையினரின் மக்கள் தொடர்பகம் உட்பட பல சோதனை நிலையங்களையும் அடித்து நொருக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ஸ்தலத்துக்கு விரைந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பல பிரயத்தனத்தின் மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கடற்படையுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடி சடலத்தை கிணற்றிலிருந்து எடுக்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்த நிலையிலும் அப்பகுதிகளில் பெரும் பதற்றமும் பீதியும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. கடற்படைக்கு எதிராக போராட்டம் செய்த பொதுமக்களைத் தேடி கடற்படையினர் தேடித் தேடி கைதுசெய்து வருகின்றனர்.

மேலும் இரவு வேளைகளில் போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளுக்குச் செல்லும் கடற்படை கண்மூடித்தனமாக இம் மக்களைத் தாக்கியும் வருகின்றது.

புங்குடுதீவில் பொது மக்களால் சேதமாக்கப்பட்ட கடற்படையின் மக்கள் தொடர்பகம் மற்றும் காவலரண்களையும் புனரமைத்துத் தருமாறும் கடற்படை இம் மக்களை துன்புறுத்தி வருகின்றது.

தினக்குரல்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP