புங்குடுதீவு வீதியில் குண்டு குழிகளைத் தவிர்க்க சாரதி முயற்சிக்க கவிழ்ந்தது வாகனம்!
குறிகாட்டுவான் துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று வீதியில் காணப்பட்ட குண்டு, குழிகளைத் தவிர்த்து ஓட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.
புங்குடுதீவு மடத்து வெளிப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
நயினாதீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசிங்கம் விஜயதீபன் (வயது 35) என்பவர் விபத்து நடந்த இடத்திலேயே மரணமானார்.
பொருட்களை வாங்க வந்தவர்களான கு.தில்லையம்பலம் (வயது 75) கை முறிந்த நிலையிலும் சு.சுரேஷ்கரன் (வயது 24) தலையில் காயத்துடனும் வாகனச் சாரதியான புங்குடுதீவைச் சேர்ந்த எஸ்.குகதாஸ் (வயது 26) சிறு காயத்துடனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாட்டா நிறுவனத்தின் “படி” வாகனமே விபத்துக்குள்ளானது. வீதி மோசமான நிலையில் இருந்ததால் குண்டு, குழிகளைத் தவிர்க்க வெட்டி ஓடிய போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக காயமடைந்தவர்கள் கூறினர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
0 comments:
Post a Comment