Saturday, October 23, 2010

புங்குடுதீவு கடலில் ‘டைனமற்’ பயன்படுத்தி மீன்பிடித்த ஐந்து மீனவர்குளுக்கும் பிணை .

‘டைனமற்’ வெடிமருந்தை பயன்படுத்தி புங்குடுதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை கைதுசெய்யப்பட்ட ஐந்து கடற்தொழிலாளர்கள் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றதால் தலா 5 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் டைனமற்றை பயன்படுத்தி புங்குடுதீவுக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அன்றைய தினமே இவர்கள் கடற்படையினரால் பெலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொலிசார் இவர்களை ஊர்காவற்துறை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி இரா.வசந்தசேனன் முன்னிலையில் ஆஜர் செய்தபோது நேற்றுவரை இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந் நிலையில் இவர்கள் நேற்று மீண்டும் ஆஜர்செய்யப்பட்டபோது இவர்களை 5 ருபாய் காசுப் பிணையில் செல்வதற்கு அனுமதித்த நீதிபதி , பிணைதொகையை செலுத்த தவறின் ஒருவார காலம் சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அத்துடன் இவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களையும் ஏலத்தில் விற்பனைசெய்யுமாறு உத்தரவிட்டார்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP