புங்குடுதீவு கடற்கரைப் பிரதேசத்தில் மனித சடலம் ஒன்று மீட்பு
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு கூட்டுறவு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவரின் சடலம் சிதைவுற்று காணப்படுவதன் காரணமாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment