புங்குடுதீவு அம்பாள் கல்வி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
புங்குடுதீவு அம்பாள் கல்வி நிலையத்திற்கு சென்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால வழங்கப்பட்ட நிதியிலிருந்து அம்பாள் கல்வி நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.137 மாணவர்கள் கல்விபயிலும் இக்கல்விக் கூடத்தில் 09 ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்nhரு ஆசிரியர்களுக்கும் மாதாந்த வேதனம் ஈ.பி.டி.பி. கட்சி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இனிப்புப் பண்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் கந்தசாமி கமலேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment