ஆலயக்கடனை நிறைவேற்ற கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை .
வண்ணார்பண்ணை தனது சொந்த வீட்டைப் பார்ப்பதற்காகவும் ஆலயத்தில் நேர்த்திக்கடனை நிறை வற்றுவதற்காவும் கிளிநொச்சி உதய நகரிலிருந்து புங்குடுதீவுக்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி உதய நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் சுப்பிரமணியம் (வயது 56) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவியுடன் தனது வீட்டைப் பார்ப்பதற்காகவும் ஆலய நேர்த்திக்கடன் செய்வதற்காகவும் கிளி நொச்சியிலிருந்து புங்குடுதீவுக்கு வந்த போதே இவ்விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையுண்ட நபர் புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேர்த்திக் கடனை முடித்துவிட்டு அப்பகுதியில் நின்ற இவரிடம் மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டதாகவும் இவரிடம் பெருமளவு பணம் இருப்பதைக் கண்ட அவர்கள் இவரையும் உடன் அழைத்துச் சென்றதாகவும் பல மணி நேரமாகியும் இவரைக் காணாத இவரது மனைவி அயலவரின் உதவியுடன் அவரைத் தேடிச் சென்றபோது புங்குடுதீவு பிள்ளையார் கோவில் பற்றைப் பகுதிக்குள் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேசமயம் இறந்த இவரை அழைத்துச் சென்ற ஒருவன் அங்கு வந்ததைக் கண்டு மனைவி அவரை இனங்காட்ட பொது மக்கள் அவரை பிடித்து பொலிஸாடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததோடு மற்றொரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
0 comments:
Post a Comment