புங்குடுதீவில் தனியார் கல்வி நிலையம் திறந்துவைப்பு!
புங்குடுதீவில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி அம்பாள் கல்வி நிறுவனம் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
யுத்த நடவடிக்கையின் பின்னர் மக்களின் மீள்குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புங்குடுதீவு பகுதியில் கடந்த 20 வருட காலமாக மணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இல்லாமல் இருந்து வந்துள்ளது. மேற்படி விடயம் அண்மையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கமலேந்திரன் அவர்களிடம் அப்பகுதி மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்திருந்தனர்.
மேற்படி கோரிக்கையினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் உடனடியாகவே அதற்கான தீர்வும் கிடைக்கப்பெற்றதுடன் புதிதாக அம்பாள் கல்வி நிறுவனம் எனும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று கட்சி நிதி மூலம் உடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூன்று மாதங்களுக்கு இலவசமாக கல்வி கற்கவும் மேற்படி கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் மூன்று மாத கொடுப்பனவுகளை கட்சி பொறுப்பேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் புங்குடுதீவு பிரதேச பொறுப்பாளர் தோழர் நவம் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment