புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா
யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் பங்குனி திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது. நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப படுகிறது. விழாவை சிறப்பிக்க சுகி.சி வம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து கொள்கிறார். முத்தமிழ் நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
ஸ்ரீ கணேச வித்தியாலயம் சித்திரை மூன்றாம் திகதி ஆயிரத்து தொளாயிரத்து பத்தாம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ஆயிரத்து தொளாயிரத்து எழுபதிரண்டில் கனிஷ்ட மஹா விதியாலயமகவும் எட்டு வருடங்களில் உயர்தர கலை பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது.
இவ் வித்தியாலயத்தின் க.நமசிவாயம்பிள்ளை, இளையப்பா, க.செல்லத்துரை, வை. கந்தையா, நா. கார்த்திகேசு, சோ, சேனாதிராசா, த. துரைசிங்கம், மு. தர்மலிங்கம், பொ. சபாரத்தினம், ச, அமிர்தலிங்கம் , கு, சண்முகலிங்கம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி பெருமை சேர்த்தனர்.
0 comments:
Post a Comment