புங்குடுதீவு சந்திப் பகுதி முழுமையாக சிங்கள வர்த்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணம் நயினாதீவு பிரதேசத்திற்கு பிரவேசிக்கும் புங்குடுதீவு சந்தி பகுதி முழுமையாக சிங்கள வர்த்தர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு சொந்தமான எந்த கடைகளையும் காணமுடியாதுள்ளதாகவும் சமாதானம் மற்றும் நிரந்தர அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு இணைப்பாளர் ஜேசுதாசன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் புங்குடுதீவு சந்தியில் மூன்று தமிழ் பெண்கள் கடலை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த குறைந்தப்பட்ச சந்தர்ப்பத்தை தென் பகுதி சிங்கள வர்த்தகர்கள் கைபற்றியுள்ளதாக அங்கு அறிய கிடைத்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் தென்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மாத்திரமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 30 முதல் 40 சிங்கள வர்த்தகர்கள் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் கடைகளை திறந்துள்ளதாகவும் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment