குண்டும் குழியுமாக காணப்படும் புங்குடுதீவு பிரதான வீதி!
புங்குடுதீவு பிரதான வீதி சேதமடைந்துள்ளதால் அப்பாதையூடாக வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அண்மையில் பெய்த கடும் மழையினையடுத்து புங்குடுதீவு பெருங்காட்டிலிருந்து குறிகாட்டுவான் வரையான பிரதான வீதி சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக சாரதிகள் தெரிவித்தனர்.நயினாதீவு,நெடுந்தீவு ஆகிய இடங்களுக்குச் செல்வோர் குறிகாட்டுவானுக்கு இப்பிரதான வீதியூடாகவே செல்லமுடியும் என்பதுடன் தற்போது தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் பெரு மளவான வாகனங்கள் குறிகாட்டுவானுக்குப் பயணிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வீதியை உடனடியாகத் திருத்தாவிடின் அப்பாதையூடான போக்குவரத்து பாதிப்படையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இறுப்பிட்டி வீதியின் புனரமைப்பு பணிக்கென நிதியொதுக்கப்பட்ட போதும் திருத்தும் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment