திரு சண்முகம் தம்பையா அவர்கள்
புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் தம்பையா அவர்கள் 16-01-2009 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லம்மாவின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சண்முகம் முத்துப்பிள்ளை ஆகியோரின் மருமகனும், காலஞ்சென்ற சதாசிவம், கனகசபை, சிவகாமிப்பிள்ளை, செல்லம்மா, அற்புதம்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சபாரெட்ணம் சின்னையா(கனடா), காலஞ்சென்ற நாகராசா பொன்னம்மா,நாகம்மா(கொழும்பு), சுந்தரம்பிள்ளை(கனடா) ஆகியோரின் அருமைமைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18-01-2009 ஞாயிற்றுக்கிழமை அன்று புங்குடுதீவு மணல்காடு மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
அற்புதம் - கொழும்பு
0094 112529782
லதா இராசேந்தரன் - சுவிஸ்
0041 326651748
0 comments:
Post a Comment