அமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி !
வாழ்ந்தவர் மறைவது
வழக்கமே யாகினும்
இழந்தது என்னவே
ஈடிணை யற்றது
ஆண்டுகள் பதினைந்து ஆகி ஆண்டவர் உண்டு
இருந்தவர் ஒருவரே எம் தெய்வத்தை இழந்தோம்
எங்கள் அப்புவே !
எத்தனை இரவுகள்
எத்தனை பொழுதுகள்
அத்தனை நொடிகளும்
அமிழ்தமாய் இனித்தவை
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து,
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம்நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே "அப்பு"
நீங்கள் எம்மை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பு
உங்கள் நினைவால் வாடுகின்றோம்
உங்கள் பிரிவால் ஏங்கு கின்றோம்
எம் இதயத்து நினைவுகளை
இதழ் கொண்டு தூவுகிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தி பெற்றிட
அனுதினமும் இறைவனை பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
குடும்பத்தினர்.
0 comments:
Post a Comment