Saturday, April 16, 2022

திரு கனகசபை சிவலோகநாதன் (ஆச்சி சிவா) அவர்கள் .


 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பரிஸ், France London, United Kingdom

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சிவலோகநாதன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஞானவடிவேல் மற்றும் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சந்திரகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சணோஷன், சாரங்கன், பிரவீன், சஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, குணபாலச்சந்திரன் மற்றும் தெட்சணாமூர்த்தி, மகாலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சசிகலா, இந்திரகலா, கமலஹாசன், சசிகுமார், சசிகரன், சுலோசனா, கமலாதேவி, மோகனசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமார், குகணேசன், கமலலோசினி, சத்தியமதி, லனுஜா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: மனைவி, மக்கள், சகோதர, சகோதரிகள்.






0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP