Tuesday, October 6, 2020

சினிமா நடிகையை காதலித்து ஏமாற்றியதாக புங்குடுதீவு இளைஞன் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

 


நடிகை சனம் ஷெட்டியை காதலித்து ஏமாற்றிய விவகாரத்தில் புங்குடுதீவு வாலிபன் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை சனம் ஷெட்டியின் புகார் அடிப்படையில் தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அடையாறு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சனம் ஷெட்டி. மொடல் அழகியான இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் தர்ஷனை நான் காதலித்து வந்தேன். அவரும் என்னை மிகவும் உயிருக்கு, உயிராக காதலிப்பதாக தெரிவித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். 1 வருடம் நாங்கள் காதல் உல்லாச வானில் சுற்றி பறந்தோம். ஆனால் தர்ஷன் திடீரென்று என்னுடன் பேசுவதை தவிர்த்து விட்டார். என்னை திருமணம் செய்யவும் மறுக்கிறார். திருமணம் செய்வதாக காதலித்து என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை சனம்ஷெட்டி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் நடிகர் தர்ஷன் மீது நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தர்ஷன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP