தீவகத்தினை மெருகேற்றும் சூழலியல் மேம்பாட்டு அமைவனம்
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( #சூழகம் ) ஏற்பாட்டில் தீவகத்தினை மெருகேற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . முதற்கட்டமாக பாழடைந்து காணப்பட்டிருந்த புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை பாடசாலையின் முன்னமைந்துள்ள பயணிகள் நிழற்குடை முழுமையாக வர்ணம் பூசப்பட்டு அழகுறச்செய்யப்பட்டுள்ளது . புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. சிவ சந்திரபாலன் ( switzerland ) அவர்களின் நிதியுதவியோடு இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
வீதிகளில் சில சுவரோவியங்களும் வரையப்பட்டுள்ளன . தீவகமெங்கும் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நன்றி குணாளன்
0 comments:
Post a Comment