Tuesday, March 15, 2016

சைவ இளைஞர் சங்கம் கண்ணகைபுரம் புங்குடுதீவு 10

சைவ இளைஞர் சங்கம்  கண்ணகைபுரம் புங்குடுதீவு 10

ஆரம்பம்  14.01.1982     
அன்பார்ந்த
புங்குடுதீவு கண்ணகைபுரம் மக்களுக்கு அறியத்தருவது 14.01.1982 தைத்திருநாள் அன்று சைவ இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டில் இருந்து 1990 ம் ஆண்டு வரைக்கும் ஐம்பத்தின்நான்கு உபயக்காரர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் பூஜை ,பஜனை சமய சொற்பொழிவுகள் சிரமதான வேலைகள் முத்துபிள்ளை அன்னதான மண்டபத்திலே ஆறுமுகநாவலர்  படிப்பகமும் அருகாமையில் வடக்குபுறத்திலே தாகசாந்தி நிலையமும் கண்ணகை அம்மன் ஆலய திருவிழா காலங்களில் சங்கத்தின் பழைய நிர்வாகத்தால் செயல் படுத்தப்பட்டு வந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே ,1990 ம் ஆண்டிற்கு பின்னர் எமது ஊரில் இடம்பெற்ற மக்கள் இடம்பெயர்வினால் சங்கம் தொடர்ந்து இயங்க முடியாத நிலையேட்பட பின்னர் 2012 ம் ஆண்டில் இருந்து ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் திருவிழா காலங்களில் சைவ இளைஞர் சங்கத்தினரால் முத்துபிள்ளை அன்னதான சபை மண்டபத்திற்கு அருகாமையில் வடக்கு புறத்தே தாகசாந்தி நிலையம் நடைபெறும் என்பதினை அறியத்தருகின்றோம்.

கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் சைவ இந்து சமய சபை அமைக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்திலும் இளையசமுதாயதினரை நல்நெறிபடுத்தி வருவதற்காகவும் கண்ணகை புரத்தை புனித தலமாகவும் மணல்காடு மயான சுடலையை புனித மயானமாகவும் நாற்புறமும் சுவர் அமைக்கப்படவெண்டுமென்றும் மறைந்த உயர்திரு செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி 1982 இல் தை திருநாள் அன்று முத்து பிள்ளை அன்னதான மண்டபத்திலே இருபதிற்கு மேற்பட்ட இளைஞர்களை கூட்டி சைவ இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ,சங்கத்தினால் சைவ சமய பிரசார கூட்டம் நடத்தப்பட்டு  மணல்காடு மயானத்திற்கு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு திரு .வைத்திலிங்கம் (கிராமசேவையாளர்) அவர்களும் ,திரு .குணரத்தினம் (விவசாய உத்தியோகத்தர் )அவர்களும்,திரு .நாகலிங்கம்( வர்த்தகர் )அவர்களும் நியமிக்கப்பட்டு அதன் பின்பு தான் மயானத்திற்கு நான்கு பக்க சுவர்களும் அமைக்கப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம் .
பின்னர் சுவிஸ் நாட்டிலுள்ள பதின்மூன்று அம்மன் அடியவர்களின் நிதி உதவியில் 2012 இல் ஆயல வளாகத்தில் தாக சாந்தி நிலையமும் அமைக்கப்பட்டது .

அவர்களையும் சைவ இளைஞர் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்களாக இணைத்துள்ளதோடு அவர்களுக்கு எமது  நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம் .இனி வரும் காலங்களில் சங்கம் திறன்பட செயல்படுத்துவதட்கு நம்மூர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி தாழ்மையுடன் வேண்டிகொள்கின்றோம்.
சுவில் வாழ் நம்மூர் மக்களுக்கு அறியத்தருவது சுவிசில் ஒன்று கூடுவதற்கு உத்தேசித்துள்ளோம் காலம், நேரம், இடம்  பின்னர் அறியத்தரப்படும் .

கண்ணகை புரம் சைவ இளைஞர் சங்கம்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP