Thursday, October 29, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவம் - 2015 சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ! ! !

வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (மன்மத வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 20.08.2015 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் சித்தி விநாயகப்பெருமானின் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாகவும் பக்தி பூர்பவமாகவும் நடைபெற்று  இனிதே நிறைவேறியது.

மண்டைதீவு  திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
 
"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

சித்திவிநாயகப் பெருமானின் மகோற்சவ பெருவிழாவினைச் சிறப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய மகோற்சவ பிரதம சிவாச்சாரியார் சிவசிஸ்ரீ மகா பிரபாகரக் குருக்கள் (முடிப்பிள்ளையார் தேவஸ்தானம் - வேலணை ) ஆலய நித்திய குருமணி கு.சுஐீவசர்மா (திருவெண்காடு மண்டைதீவு) மற்றும் சிவசிஸ்ரீ சபா வாசுதேவக்குருக்கள் (சிவன் தேவஸ்தானம் சித்தங்கேணி )  கைலாச வாமதேவ ராஐ் குருக்கள் (நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் தேவஸ்தானம்) ஏனைய அந்தண சிவாச்சாரியர்களுக்கும் 

மங்களவாத்திய கலைஞர்களுக்கும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மகோற்சவ கால விசேட திருவிழாக்களை வீடியோபதிவு செய்த நயினை அபிராமி வீடியோவுக்கும் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உற்சவகால ஆலய பணியாட்கள் மற்றும் ஆலய தொண்டர்கள் திருவிழா உபயகாரர்கள் வழிபடுனோர் அன்னதான உபயகாரர்கள் பணியாட்கள் மேலும் உற்சவகாலத்தில் நன்னீர் வசதி மற்றும் சுற்று சூழல் திருவீதிக்கு தினந்தோறும் நீர் பாச்சிய வேலணை பிரதேசபை உபஅலுவலகம் - மண்டைதீவு 

சித்தி விநாயகப்பெருமானுக்கு பத்து தினங்களும் கவி வரிகள் தொடுத்து முகப்புத்தகங்களில் பகிர்ந்து கொண்ட  பாலகவிஞர்  நயினை அன்னைமகன்  செ.ம. நவரூபன் அவர்களுக்கும்

மகோற்சவகால சிறப்பு மலர்கள் , மகோற்சவ நிகழ்வுகளை  பிரசுரித்த நாளிதழ்களான வலம்புரி உதயன் தினக்குரல் பத்திரிகைகளுக்கும் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை ஒலிபரப்பு செய்த யாழ்ப்பாணம் நவீன சந்தை வணிகலயம் விளம்பரசேவைக்கும்

சித்திவிநாயகப்பெருமானின் இரதோற்சவ திருவிழாவை வர்ணனை மூலம் அலங்கரித்த வர்ணனையாளர்களுக்கும் மகோற்சவ பத்துதினங்களும் சமய சொற்பொழிகள் சங்கீதக்கச்சேரிகள்  பஐனைகள்  நிகழ்த்திய பெருயோர்கள் மற்றும் மகோற்சவ நிகழ்வுகளை அறிவிப்புச் செய்த அறிவிப்பாளர்களுக்கும்

இணையத்தளம் மூலம் உற்சவகால புகைப்படங்கள் காணொளிகளினை பதிவுசெய்து இவ் விரிந்த உலகில் பரந்து வாழும்  சித்தி விநாயகப்பெருமானின் அடியவர்களின் மனக்கண்முன்னே கொண்டு சென்ற அனைத்து இணையத்தளங்களுக்கும்  


திருவிழாக்காலத்தில் அனைத்து வகையிலும் உதவி புரிந்த சித்தி விநாயகப்பெருமானின் தொண்டர்கள் அனைவருக்கும் எம் பெருமானின் பாதரவிந்தங்கள் பணிந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு திருவெண்காட்டுப்பெருமானின் திருவருள் அனைவருக்கும்  கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.


இங்ஙனம்.
ஆலய தர்மகர்த்தாக்கள்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன்  (இந்திரன்)
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் - 
யாழ்ப்பாணம் , இலங்கை.


 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP