திரு. நடராசா ஞானேஸ்வரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி !!
எம்மையெல்லாம் ஆறாதுயரத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் கொண்ட எங்கள் அன்பு தெய்வத்தின் 31ம் நினைவுநாள்!!
அமரர் நடராசா ஞானேஸ்வரலிங்கம்
(திதி -30.07.2015)
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி தலை நகரம் பெர்லினை கடந்த 35 வருடங்களாக வதிவிடமாகவும் கொண்ட,எல்லோராலும் பாசமாக "ஞானி " என்று அழைக்கப்படுகின்றவருமாகிய அமரர் நடராசா ஞானேஸ்வரலிங்கம் அவர்கள் கடந்த 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தபோது அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு ஓடோடிவந்துஉதவிகள், ஒத்தாசைகள்
புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்துகொண்ட உற்றார்,உறவினர் ,நண்பர்கள்
அனைவருக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும் மற்றும் இறுதிக் கிரியை
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் மறைவை முன்னிட்டு இன்று 30.07.2015 வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து Berlin kreuzberg நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
உன் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவனை பிராத்திக்கின்றோம்.
ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம்சாந்தி
குடும்பத்தினர்
0 comments:
Post a Comment