Thursday, March 12, 2015

புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் மஹோற்சவப் பெருவிழா‏ !!

புங்குடுதீவு கிழக்கு கலட்டியம்பதி (கலட்டி பிள்ளையார் கோவில்) ஸ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழன் முதல் 04.04.2015 சனி வரை
விநாயகப் பெருமான் அடியார்களே! புங்குடுதீவு கிழக்கில் கலட்டி எனும் திவ்விய திருப்பதியில் கோவில் கொண்டு உலகம் முழுவதும் வாழும் பக்தர்களை காத்து ரட்சிக்கும் கருணைத் தெய்வமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் திருவருளால். நிகழும் மங்களகரமான ஜய வருடம் 26.03.2015 வியாழக்கிழமை முதல் 04.04.2015 சனிக்கிழமை வரை பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறவுள்ளது.

அடியார்கள் நிகழ்ச்சி நிரலின்படி தினமும் ஆசாரசீலராக வருகைதந்து ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்று சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்ஙனம் சிவப்பணியில் நிற்கும் “சிவாச்சார்ய குலபூஷணம்”, “சிவாச்சார்ய கலாநிதி” சிவஸ்ரீ. பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் (ஐயாமணி)
ஆலய மஹோற்சவகுரு, ஆலய முதல்வர், ஆலய பிரதமகுரு கனடா: 1.416.266.3333
இலங்கை: 0094.779.923.723
 e-mail: vijayankurukkal@gmail.com
facebook.com/kaladdipillayar.pungudutivu

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP