அமரர் சுப்பிரமணியம் விஜயரெத்தினம் அவர்களின் 20 ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் சுப்பிரமணியம் விஜயரெத்தினம்
திதி : 09/01/2015
(புங்குடுதீவு 3 ம் வட்டாரம் )
அன்பின் திருவுருவே அருள் நிறைவின் இருப்பிடமே !பாசத்தின் திருவுருவே பண்பதனின் பொக்கிஷமே!
அன்பான உடன்பிறப்பே அருந்திறலே எம்மவனே !
ஒன்றாய் பிறந்தோம் ஓர் வட்டில் தான் உண்டோம்
நன்றாக ஒன்றிணைந்த நானிலத்தில் உயர்வு கண்டோம்
தாயும் தந்தையும் ஓருயிரின் வழிகாட்டலிலும் ஒன்றாக சேர்ந்து உயர்வாக வாழ்ந்திருந்தோம்.
நாடு விட்டு நாடு வந்து நன்வாழ்வு தனைத்தந்து
நல்லதொரு துணைவியென்று நாமிருந்து மகிழ்ந்த வேளையிலே
நீண்டகாலம் இருவரும் சேர்ந்து வாழ பொறுக்கலையே ஐயா!
அந்த கொடிய காலனவன் உன் வாழ்வை பறிகொண்டு போனானே!
உன் உருவம் மறைந்தாலும் உன் நினைவுகளோடு...
மனைவி உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
0 comments:
Post a Comment