Tuesday, December 16, 2014

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பொருட்கள், புங்குடுதீவுக்கு வைத்தியசாலைக்கு வழங்கப் பட்டது..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.








பேர்ன், சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய உடைகள் (சிறுதொகை) என்பனவே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபையின் ஊடாக இவ்வாறு புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.


இவற்றில் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகை பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, மேலதிகமாக இருந்த வைத்தியர்கள், பணியாளர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள் என்பன வேலணை சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக, யாழ். வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த வகையில், இப்பொருட்களை மனமுவந்து தந்த சிலோவா வைத்தியசாலை (Stifftung Klinik SILOAH, Worb Str-316, 3073GUMLIGEN) நிர்வாகத்துக்கும், மேற்படி பொருட்களை பெற்றுத் தந்த திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) மற்றும் திரு.வஜி அவர்களுக்கும், அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான முழுச்செலவினையும் பொறுப்பேற்ற “ஏசியன் பூட் சிற்றி” ““kirchberg “ASIAN FOOD CITY” திரு.க.ஐங்கரன் அவர்களுக்கும்,


இதனை புங்குடுதீவில் வைத்து பொறுப்பேற்று உரிய வகையில் வழங்கிய பங்குத்தந்தை அருட்திரு. சின்னத்துரை லியோ ஆர்ம்ஸ்ராங் (தற்போது பாசையூர் தேவாலய பங்குத்தந்தை) அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே நீங்களும், இதேபோன்று புங்குடுதீவு மக்கள் பயன்பெறும் வகையில், உங்களால் முடிந்த பொருட்களையோ அல்லது நீங்கள் பணிபுரிகின்ற இடங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளக்கூடிய பொருட்களையோ சேகரித்து எம்மிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் புங்குடுதீவு மக்களைச் சென்றடையும் வகையில் நாங்கள் அவற்றை இலங்கைக்கு அனுப்பி வைப்போம் என்பதை அறியத் தருகின்றோம்.


நீங்கள் இவ்வாறு உதவுவதுடன், மற்றையவர்களும் இவ்வாறு உதவுவதற்கு தூண்டுவதன் மூலம்; புங்குடுதீவு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை முடிந்தவரை நிவர்த்திக்க முயல்வோம்.


இவ்வண்ணம்..
த.தங்கராஜா
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிஸ்லாந்து.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP