Thursday, November 27, 2014

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில், ஆசிரியர் தின விழா..!!!

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவின் போது பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், ஊர்ப் பெரியார்கள், மதகுருமார்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
அத்துடன் திவிநெகும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புங்குடுதீவில் மரம் நடும் விழாவும், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றிருந்தது. மேலும் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70ற்கு மேற்பட்ட மற்றும் 100ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இப்பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பிலான புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன… இதேவேளை எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி (01.12.2014) திங்கட்கிழமை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஒளிவிழா நடைபெற ஏற்பாடாகி வருவதாக றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்கள் எமக்கு அறியத் தந்துள்ளார். இதேவேளை மேற்படி ஒளிவிழாவை முன்னிட்டு, மேற்படி புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 3ம், 4ம், 5ம் வகுப்பு மாணவர்களுக்கான “பொக்கே செய்யும் போட்டியும், வாழ்த்து மடல் செய்யும் போட்டியும்” 1ம், 2ம் வகுப்பு மாணவர்களுக்கான சித்திரம் வரைதல் போட்டியும் நடைபெற்றது. இது தொடர்பிலான புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன… இப்பாடசாலையின் அதிபரான செல்வி ஜெகநந்தினி முத்துக்குமார் அவர்கள் யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்தவர் என்கிற போதிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு தினமும் வந்து கல்விச் சேவையினை வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டக்கத்தக்க விடயமாகும்.









தகவல் மற்றும் புகைப்படங்கள்..
ஜனா – ஜனி -

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP