புங்குடுதீவு வாழ் மக்களே ஒப்புக்கு மாரடிக்கும் கூட்டத்தை கலைத்து, மக்களுக்கு சேவை செய்ய வாருங்கள்
புங்குடுதீவு ப.நோ.கூ.சங்கம் பல ஆண்டுகளாக மக்களுக்கு பல இன்னல்களுக்கு மத்தியிலும் சேவை செய்து வந்தது. போர் கால சூழலிலும் மக்களுக்கான தேவைகளை திறம்பட செய்து வந்த ப.நோ.கூ.சங்கங்களில் புங்குடுதீவு சங்கமும் ஒன்று. இப்போது இச்சங்கம் பல வசதிகள் இருந்தும் சரியான ஒரு நிர்வாக அலகை ஒழுங்குபடுத்தி செயல்பட முடியாமல் ஒரு சில நபர்களின் கைகளில் இச்சங்கம் அகப்பட்டு, இன்று சங்கத்தின் உடமைகளை விற்க முற்படுகின்றார்கள். ஆகவே புங்குடுதீவு வாழ் மக்களே ஒப்புக்கு மாரடிக்கும் கூட்டத்தை கலைத்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இருக்கும் நபர்களை உள்வாங்கி சங்கத்தை சிறந்த முறையில் இயங்க எல்லோரும் இணைவோம்.
0 comments:
Post a Comment