Friday, October 10, 2014

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வி திருமதி பாலகௌரி சிவலிங்கம் (டென்மார்க்) குடும்பத்தினர் அன்னதானம் வழங்க முன்வந்து நேசக்கரம் அமைப்பிடம் ஆயிரம் டெனிஸ்குறோணர்களை வழங்கியிருந்தார்கள்.
அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நினைவுநாளன்று மட்டக்களப்பில் நேசக்கரம் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வில் 120இற்கும் மேற்பட்ட சிறுவர்களும் பெரியவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
05.10.2014 அன்று நடைபெற்ற இந் நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்கள் பெரியவர்கள் அனைவரும் அன்னார் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களிற்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து அன்னாரின் ஆத்மா அமைதியை வேண்டியதோடு அவரது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தனர்.
புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் நினைவுநாட்கள், பிறந்தநாள் , திருமணநாட்களில் இத்தகைய உணவழித்தல் மூலம் பலரது பசியைப் போக்கும் அதேவேளை தங்களாலான ஆதரவினையும் ஏழைகளுக்கு வழங்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்படி நிகழ்வு போன்ற உணவழித்தலில் பற்கேற்க விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் வகையில் எம்மால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற முடியும்.

http://nesakkaram.org/ta/about

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP