சுவிஸில் தீ விபத்தில் கருகிய, புங்குடுதீவு இளைஞன்!!
சுவிஸில் நிலையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சுவிசின் லவுசான் (Swiss Lausanne) மாகாண புறநகர் பகுதி ரெனா (Renens) எனும் இடத்தில் பொருட்களை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் எதிர்பாரதவிதமாக தீவிபத்து எற்பட்டதில், அருகிலிருந்தோர் தீயணைப்பு படையினருக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகள் மற்றும் அவசர ஊர்திகள் உதவிக்கு வந்தது.
இந்நிலையில் தீயணைப்பில் ஈடுப்பட்ட வீரர்கள் கட்டடத்தின் நுழைவு பகுதியின் கதவருகே ஒருவரது உடல் சாம்பலாக இருப்பதை கண்டனர். இதுகுறித்து மாநாகராட்சி அலுவலகர்கள் கூறுகையில், வீடற்ற இந்நபர் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் அனுமதியின்றி இங்கு தங்கியுள்ளார் என்றும் புகலிடம் ஏதும் இல்லாததால் பாவப்பட்டு அவர் இங்கு தங்குவதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் பிறிதொரு தகவலின்படி இவர் இலங்கை புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்தவர் எனவும், பெயர் சோதி எனும் பொன்னம்பலம் சுபசோதி எனவும் தெரிய வருகிறது. இவ்விடயம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:
Post a Comment