Monday, October 28, 2013

வரலாற்றில் புங்குடுதீவின் ஒரு கண்னோட்டம்!

தமிழருடைய வரலாறு மிக தொன்மையானது அதனால்  அவர்களுடைய வரலாறு  சரியாக பேணப்படமுடியவில்லை என்பது ஆய்வாழர்களாலும் ஆசிரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே
அந்த வகையில் பழமையும் தொன்மையும் கலாச்சார ஆரம்பமும் பல குடித்தோன்றலும் பல அரச பரிபாலனத்தின் எச்ச சொச்ச குடிமணைகளும் பல கோட்டைகளும் வெளிச்சவீடும் பழமைகொண்ட பெரும் ஆலயங்களும் ஊர்பெயர்களும் ஏரிகளின் வரலாற்று கதைகளையும் கொண்ட தொன்மை  மிக்க குடியாகபதியப்பட்ட புங்குடுதீவின் வரலாற்றை நோக்குவோம்.
இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனமான தமிழரின் வரலாற்றை தினிப்பது போன்று இலங்கைத் தமிழர்களும் தீவுப்பகுதியினுடைய வரலாற்றை தினித்தும் தனித்தும் மறைத்தும்
சொல்லி வருவதும் நாமறிந்தவையே.
புங்குடுதீவினுடைய வரலாறு சப்ததீவினிருந்து ஆரம்பிப்பதே ஒரு நாகரிகமாக மாறிவிட்டது இதற்கு புவியியல் ஆசிரியர்களும் துணைபோவது வேதனையானது. யாழ்ப்பாணத்திற்கு பொட்டும் பூவும் வைத்தாற் போன்று எந்தழிவு வந்தாலும் யாழுக்கு தன்னுயிரையாகுதியாக்க தயாராக இருப்பவை இந்த ஏழு தீவுகள்.  பெரும் நாடுகளாய் நகரங்களாய் இருந்து இன்று தீவுகளாய் காணப்படுபவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தீவுகள் பெரும் இராசதாணிகளாய் இருந்திருப்பதற்கான புவியியல் காரணிகள் பல உண்டு. நற்றமிழ் பேசும் நாற்பதிற்குமதிகமான நாடுளை தன்னகத்தே கொண்ட குமரிக்கண்டம் அழிந்தவேளை அவற்றோடு ஒத்த பிரதேசங்களாக இவையிருந்து அழிந்திருக்கலாம்.பூம்புகார் பட்டிணம் அழிந்தவேளை  புங்கைப்பட்டிணமும் அழந்திருக்குமென என்னுவதில் தவறில்லை.நாகதீபத்தை தலைநகராக கொண்டு பல வருடம் ஆட்சி நடந்ததை ஏற்றுக்கொள்பவர்கள் நயினாதீவும்  அதன் அண்டிய பிரதேசங்களுமாகிய இன்றைய தீவுப்பகுதிளும் முன்பு பெரும் ஆட்சி நடந்த நகரங்களாக  இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இலங்கையின் வரலாற்றில் இயக்கர் நாகர் குடித் தோன்றலே மூத்த குடியென்பது உலகறிந்த உன்மை அம்மக்கள் பரம்பலே புராதனகாலத்தில் தீவுப்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்திருக் வேண்டும் நாமறிந்த காலத்திலே அச்சுவேலி சாவகச்சேரி புத்தளம் சிலாபம் மற்றும்  வன்னியெங்கும் இங்கிருந்தே குடிபெயர்ந்தார்கள்.யாழ்ப்பாண மண்ணையும் தீவுப்பகுதி மண்ணையும் ஆராய்ந்த ஆராச்சியாளர்களுக்கு தெரியும் எப்பகுதி மூத்த குடித்தோன்றலென்று.புராதன குடியிருப்பு என்பதனால்தான் தண்ணீர் தட்டுப்பாடு தீவுப்பகுதியில் முதல் தலையெடுத்தது.

சிலருடைய கணிப்பில் மிகவறண்ட பிரதேசமாக தீவுப்பகுதியிருந்திருந்தால். காரைநகரில். மண்டதீவில் நெடுந்தீவில் அனலதீவில் புங்குடுதீவில் கோட்டைகளும் தீவையண்டியே யாழ்கோட்டையும் அமைந்திருப்பற்கான காரணம் யாது. புங்குடுதீவிலும் ஊர்காவற்றுறையிலும் மற்றும்அனலதீவிலும் வெளிச்ச வீடுகள் எதற்கு? இக்கோட்டைகளை போர்த்துக்கேயர் ஓல்லாந்தர் ஆங்கிலேயர் முறையே புணரமைத்தார்களா கட்டினார்களா அல்லது முற்காலத்தில் தமிழ் மன்னர்கள் அமைத்த பாதுகாப்பு அரன்கள் இருந்த இடத்தில் கட்டினார்களா என்ற கேள்விக்கு பல சரித்திர ஆய்வாழர்களால் விடைகானமுடியவில்லை. விடை எதுவாயினும் அப்பிரதேசங்கள் முக்கியமானவையாக இருந்ததினாலே அங்கே கோட்டைகளையமைத்திருக்கிறார்கள்..முற்காலத்தில் மூவேந்தர் ஆட்சியும் பிற்காலத்தில் காலனித்துவ ஆட்சியாளர்களும் அப்பிரதேசங்களில் கால்பதித்ததன் மூலமும்  தீவுப்பகுதியின் வளசெழிப்பு நிருபணமாகின்றது. இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அவர்கள் ஆட்சி இருந்ததே என நீங்கள் முனுமுனுப்பீர்கள் என்பதை யான் அறிவேன்.தீவுப்பகுதிக்கே தங்கள் நாட்டு சிறப்பு பெயரையிட்டு சென்றுள்ளனர்.
மூவேந்தர் ஆட்சியும் அவர்கள் வாழ்ந்த அத்தாட்சியும் நிறையவே இன்றுமுண்டு பல்லவர்காடு பல்லவன்ஓடை.பல்லவன்பதி சோழன்ஓடை கோட்டைக்காடு களதீவு (களம்கண்டதீவு)வீராமலை இவ்வாறு பல இடப்பெயர்களும். பரநிருபசிங்கம் பராக்கிரசிங்கம் வீரசிங்கம் போன்ற அரச பெயர்களும் தீவுப்பகுதியில் பெருவாரியாக இன்றும் வழக்கத்திலுண்டு.யாழ்ப்பாணத்தையாண்ட அரச பரம்பரை என்ற நூலில் யாழ் இராசதாணியை அரசாண்ட அரச பரம்பரையினர் இன்றும்  தீவுப்பகுதியில் நெடுந்தீவு தொடக்கம் அராலி வரை அவர்களது எச்ச சொச்ச வாரிசுகள் வாழ்ந்து வருவதாக நூலாசிரியர் குறிப்pடுகின்றார். (ஓவ்வொரு நாடுகளிலும் அரச பரம்பரையினர் இன்றும் வாழ்கின்றபோது h:ழத்தின் அரச குடும்பங்கள் எங்கே? )  அரச பரம்பரையை தொடர்ந்து முதலியார் பரம்பரை ஆட்சிக்குட்பட்ட வேளை தனிகநாயகம் முதலியார் ஆட்சி தீவுப்பகுதியில் கோலோச்சியிருந்திருக்கின்றது. இன்றும் அவர்களது வாரிசுகள் எனக்கூறுவோர் எம்மில் பலர் உள்ளனர். முதலியாருக்குரித்தான பல காணிகளில் ஆலயங்களும் பாடசாலைகளும் இன்றும் அவர்கள் அதிகாரங்களை அடையாளப்படுத்தி நிற்கின்றன. காலங்கள் உருண்டோடின கடல் மாதா களணிகளை கடலலைக்குட்படுத்தினாள் கற்பகசோலைகளும் சிற்பங்களும் சிம்மாசணங்களும் சிதிலமடைந்தது. நாம் வாழ்ந்த காலத்தில் நடந்த ஆழிப்பேரழிவின் தாக்கத்தை பார்த்;தோம் எத்தனையோ அழிவுகளைக்கண்ட புங்கைமண்னிடம் ஆண்ட ஆதாரங்களை கேட்டிடமுடியுமா?

இராமபிரான் வாழ்ந்ததை ஏற்பவர்கள் அவர்காலத்திற்கு முன்பே வணங்கப்படும் லிங்க வழிபாட்டை கொண்ட பழைமையும் தொன்மையும் கொண்ட காரைநகர்சிவன் புங்குடுதீவு பாணாவிடை தான்தோன்றிசிவனும் அதே போன்று கண்ணகி வரலாற்றை போற்றுபவர்கள் கண்ணகி ஆலயம் உள்ள பகுதியை அக்காலத்தையொத்த குடியென ஏற்றுக்கொள்ளல் முறையே மூட நம்பிக்கை நிறைந்த புராதண காலத்தில் காவல் தெய்வங்களான ஐயனார் .வைரவர் வழிபாடுகள் நிறையவே நிலவியதன் காரணமாக தீவுப்பகுதியில் நூற்றுக்குமதிகமான வைரபர் ஐயனார் ஆலயங்களும் முருங்ககற்களால்    உருவாக்கபட்ட பல கோவில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தோடு ஆலயங்களில் திருவிழாக்கள் தோற்றம் பெறமுன்  கோவில்கள் தோறும் நாயன்மார்கள் குருபூசைகள் வழக்கத்தில் இருந்ததை நாம் அறிவோம்.அப் éசைகளை தொடரும் பல பழைமையான ஆலயங்கள் உள்ளமை அவர்கள் காலத்து குடித்தோன்றலை பறைசாற்றி நிற்கின்றது.
வியாபாரம் என்பது ஒரு தொழிற் கல்வியே என்பதையுணராது தீவுப்பகுதி மக்களை ஏளணம் செய்து தொழிழைத் தொடங்கி தோல்வியின் உச்சக்கட்டத்திற்கு சென்று மீளமுடியாது போனவர்கள் பலர்.வியாபாரத்தில் இவ்வதிதீய திறமை எம்மவர்களுக்கு எப்படி? முற்காலத்தில் தலைநகராக இருந்த எம்பகுதி மக்கள் இயல்பாகவே தொழிலில் இசைவாக்கமடைந்திருக்கவேண்டும் அவ்வழித்தோன்றலின் விழுமியங்களே வியாபாரத்தில் எம்மவர்களின் வெற்றியின் இரகசியமாக  கொள்ள தக்கது. பிறேமதாச காலம்வரகை;கும் ஐக்கிய தேசிய கட்சியினதும் சுதந்திர கட்சியினதும் ஐனாதிபதி வேட்பாளர்களாய் யாரை நிறுத்துவதென்ற முடிவை கொழும்புவாழ் தீவுப்பகுதி  தொழிலதிபர்களே முடிவுசெய்தார்கள் என்பது வரலாற்று உன்மை .ஆம் யாருக்கு அவர்களது பொருளாதார பங்கழிப்பு இருக்கின்றதோ  அவரையே வேட்பாளராக்கின்றளவிற்கு எம்மவர்கள் கொழும்பில் கோலோச்சியமைக்கு காரணம் எமது மூதாதையரது மூளோபாய தன்மையே தவிர வேறொன்றில்லை.எனவே தீவுப்பகுதி மக்களது வியாபார நுட்பம் இன்று நேற்றல்ல முற்காலம் தொட்டிருந்திருக்கவேண்டும்.புங்கை நகர் வியாபார நகரமாகவும் நெடுந்தீவும் அண்டிய அழிந்த பிரதேசமும் பாதுகாப்பு நகரமாகவும் இருந்திருக்க வாய்புண்டு அதன் காரணமாகவே இக்காலம் வரைக்கும் குதிரைகள் போர்க்குணம் கொண்டவையாக ஓடித்திரிகின்றன. காரைதீவு கப்பல்துறைமுகமாகவும். நயினாதீவும் தொடர்ந்த அழிந்த பரப்பும் நாகர் வழித்தோன்றலின் அரசோச்சிய பகுதிகளாக இருந்திருக்க நிறையவே  வாய்புக்களுண்டு.
நாடுகளை காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தி தமது மொழியையும் கலாச்சாரத்தையும்  நிலைநிறுத்தி உலகத்தின் வணங்கா முடியாக திகழ்கின்ற இங்கிலாந்து ஒரு தீவு அதேபோன்று தீவுப்பகுதி மக்களும் நாம் அறியாத காலங்களில் இன்றுள்ள இலங்கையின் பல பாகங்களிலும் சென்று குடியேறியதாக நாட்டுப்புற பாடல்களிலும் வாய் மொழிகதைகளுனூடும் சில ஆலய சுவடிகளின் மூலமும். வயதானவர்களின் பிரசங்கங்களிலும் கேட்டிருக்கின்றோம். அறியப்பட்ட பதிவின் படி தீவுப்பகுதியை சேர்ந்தவர்கள்  புத்தளம் சிலாபம் சாவகச்சேரி கிளிநொச்சி திருகோணமலை வன்னி போன்ற வடபகுதியின் பல பகுதிகளிலும் குடியேறி தமிழீழத்தின் எல்லையை நிர்ணயித்தபெருமை தீவுப்பகுதி மக்களையே சாரும். இந்த சாதனைக்கு அரசாங்கமும் அதிகாரிகளும் தமிழ் பா-உறுப்பிணர்களும் த-காவல்துறையும் பெரும் தடையாக இருந்திருக்கிறார்கள்.சில சந்தர்பங்களில்; உயிரையே மாய்த்திருக்கிறார்கள். இன்று வன்னியென வாய்கிளிய பேசும் தமிழர்கள். வன விலங்குகளாலும் வல்லமை கொண்ட அதிகாரிகளாலும் அன்று அநாதைகளாக சாகடிக்கப்பட்டவர்களையும.; அவர்களது éர்வீகத்தையும்  போற்ற மறந்துவிடுகிறார்கள.; வியாபார நோக்கத்தோடு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தீவுப்பகுதி மக்கள்  குடியேறியமை நாடறிந்தவை எம்மவர் கடையில்லாத ஊரே  இலங்கையில் முன்பு இருக்கவில்லை இனக்கலவரங்களின் போது தீவுப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட உயிர் .உடமையிழப்பு என்றுமே h:டுசெய்யமுடியாதiவுயும் மறக்கமுடியாதவையும். இனப்பிரச்சனையால் தீவுப்பகுதி மக்கள் பாதிக்கப்பட வில்லையென்ற வாதம் தவறானவை. கலவரங்களால் முன்பும் யுத்தத்தினால பின்பும்  பாதிக்கப்பட்டவர்கள் தீவுப்பகுதியை éர்வீகமாக கொண்டவர்களே.
அரசியலிலும்  சேர் .பொன்.இராமநாதன் காலத்திலிருந்து இன்றுவரகை;கும் நிறைந்த அப்பழுக்கற்ற தூயசேவைகளை எம்மவர்கள் செய்திருக்கின்றார்கள்.இலங்கையின் முதல் சபாநாயகராக இருந்தவரான சேர் வைத்திலிங்கம் துரைசாமி தீவுப்பகுதியை சேர்ந்தவரென்பதிலிருந்தே எம்மவர்களின் அன்றைய அரசியலின் h:டுபாடு புலனாகின்றது. தமிழரசுக் கட்சியின் காலத்திலும் கனமான சேவையை செய்தவர்கள் பலர். தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்டவரும். தேசிய தலைவர் தனக்கு பிடித்தமான தலைவரெ குறிபிடப்பட்டவருமாகிய வ.நவரட்ணம் பல எழுச்சிப்போரட்டங்களுக்கு வித்திட்ட பெரும்தகையாவார்.இவர் தீவுப்பகுதியை சேர்ந்தவர் என்பது எமக்கு பெருமை தீவுப்பகுதியை சேர்ந்தவர் அதனாலே அவர் கூட்டணியிலிருந்து அமிர்தலிங்கம் போன்றோரால் துரத்தப்பட்டார்.அவரை சேர்த்து கட்சியை வழி  நடத்தியிருந்தால் இன்று அமிர்தலிங்கம் நெல்சன் மண்டலோ போல் எம்மோடு இருந்திருக்கலாம். தமிழர் விடுதலைக்கூட்டனியின் சிறந்த பேச்சாளர்களாக புங்குடுதீவை சேர்ந்தவர்கள் பலர் முன்னனியில் இருந்திருக்கிறார்கள் திரு .நாவரசன் (எழுத்தாளர்) திரு. திருநாவுக்கரசு  (பின்நாள்
வட.சர்வோதய ஸ்தாபகர்) திரு.எஸ். கே.மகேந்திரன் சட்டத்தரணி இவரது பேச்சு வல்லமையினாலும் குரலின் ஆளுமையினாலும் தந்தை செல்வநாயகம் நோய்வாய்பட்டிருந்த காலங்களில் அவரது பேச்சை உரத்து சொல்லுகின்ற பொறுப்பை இவரிடம் கூட்டனியினர் வழங்கியிருந்தமையும்;  அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்க தாமதிக்கின்ற வேளையில் ஒருங்கமைப்பாளர்கள் இவரை அவர்கள் வரும்வரை உரையாற்ற வேண்டி நின்றதன் மூலமும அவரது பேச்சின்  தாற்பரியம்  உணரப்பட்டமையேயன்றி வேறல்ல.விடுதலைப்போராட்ட காலத்திலும் பல வீரம் செறிந்த வீரர்களை விடுதலைக்கு வித்தாக்கியுள்ளனர்.இவ்வாறு புங்குடுதீவினதும் அந்த மண்ணை éர்வீகமாக கொண்ட மக்களதும் வரலாறு மிக நீண்டதும்  மிக தொன்மையானதும் உன்மையானதுமான அந்த வரலாறு ஆராயாப்பட வேண்டியதும் அதனை பேணிப்பாதுகாக்க நாம் கடமைப்பட்டவர்களுமாவோம்.
இன்றைய சப்ததீவு என வழங்கப்படுகின்ற ஏழு தீவுகளுனுடைய வரலாறானது ஏழேழு nஐன்மங்களை கொண்டதாக இருந்திருக்கவேண்டும் அவற்றை எம்மால் ஆராய்ந்திட முடியாது. புராதன காலத்தில் அமைக்கப்பட்ட தமிழ் சங்கத்திற்கே முற்பட்ட வரலாற்றைக்கொண்டவை எம்பிரதேசங்கள.; நிற்க- தீவுகளுக்குள் நடுநாயகமாகவும் தலைத்தீவாகவும் இருக்கின்ற புங்குடுதீவானது. பல்வேறு காலங்களில் பலபெயர்களில் வழங்கப்பட்டு பண்முக நிலைகளில் பர்ணமித்து ஆம் நாடாக பின் நகரமாக தற்பொழுது தீவாக (எதிர்காலத்தில் கரைகள் தோறும் அணைகள் கட்டி பாதுகாக்காவிடில் யாழ்ப்பாணத்தின் நெற்றித்திலகமாக இருக்கின்ற அத்திலகம் அகிலத்தின் வரைபடத்திலிருந்தும் அழிந்துவிடும் அபாயம் நிறையவே உண்டு காத்திட அணிதிரண்டிடுவீர்) காலத்தால் பின் தோன்றிய இனங்கள் வரலாற்றை பதிவுசெய்து கொண்டார்கள். முன்தோன்றிய இனங்கள் வரலாற்றை வழப்படுத்தினார்கள். புங்குடுதீவின் வரலாற்றையும் பலர் பல்வேறு விதமாக கூறுவர். குமரியில் இருந்து இமயம் வரை தமிழர் செறிந்து வாழ்ந்த காலத்தில் மலையாள மொழி தோன்றாவேளை கேரள மாநிலம் உருவாக்படமுன் இன்றைய தமிழ்நாட்டு கேரள எல்லையில் இன்றும் உள்ள கிராமமான éங்குடி கிராமத்தில்  பல ஆயிரம் வருடங்களுக்கு முன்
இயற்கையணர்தனத்தால் அங்கிருந்து ஒரு பகுதியினர் இந்தியாவோடு நிலவழித்தொடர்பு இருந்தவேளை சேரன் தீவென பெயர் சூட்டபட முன்பே இன்றைய  இலங்கையின் வடபகுதியாய் நீண்ட நிலப்பரப்புக்களை கொண்டதும் நிறைந்த வளங்களைக்கொண்டதும் இன்று வளங்கள் ஏதுமற்ற பிரதேசமென சிலரால் கருதப்படுகின்ற இன்றைய புங்குடுதீவின் வடபகுதியை வந்தடைந்தார்கள். ஆழமற்ற கடலையும் மணலையும் விரும்பும் தமிழர்கள் அவ்விடத்திலே தமது வாழ்வை தொடங்கினார்கள். ஓம் என்ற பிரணவ மந்திரத்தை அடிப்படையாக வைத்து ஓவண்ணாவை எழுதுகின்ற வழியே வட்டாரங்களை உருவாக்கினார்கள். ஓவண்ணா எழுதுகின்ற இடத்திலேயே முடிவடையும் அதன் காரணமாகவே  புங்குடுதீவின் முதற்பகுதிகளான ஊரைதீவு மடத்துவெளி போன்றவை 7ம் 8ம் வட்டாரங்களாக அமையப்பெற்றன. நம்மவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக இத்தத்துவத்தை ஊரைதீவில் வாழ்ந்த முத்தர் சுவாமிகளால் முன்மொழியப்பட்டதாக வாய்மொழிதகவலுண்டு.ஊரைதீவு. இருபிட்டியை சேர்ந்தவர்களின் பெரும் குழுமமான முத்தர் பரம்பரையின் முத்தரின் மூதாதையர்களில் ஒருவராக சுவாமியவர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. éட்டன் பேரனது பெயர்களை சூட்டுகின்ற  வழக்கம் தமிழருக்குண்டு. இவர் பாணவிடையிருந்து கண்ணகையம்மனை பற்றி பதிகங்கள் பாடிக் கொண்டிருப்பவராக அறிய முடிகின்றது. உயிர் எழுத்துக்கள் 12. மாதங்கள் 12. இராசிகள் 12. சைவ மக்களுக்கு 12முக்கியமானதனால் 12 வட்டாரங்களை உருவாக்கினார்கள்.
அதேபோன்று 27 நட்சத்திரங்களின் நினைவாக இருபத்தியேழு கிராமங்களையமைத்தார்கள்.
ஊராக இருந்ததன் காரணமாக(ஆதிக்குடிகள்) ஊரைதீவாகவும் வரகு விளைவதனால் வரதீவு எனவும் ஆதி காலத்தில் ஒரு இடத்தை சென்றடைய நீண்ட நாட்கள் தேவைப்படுவதனால்   பெரு நிலவுரிமையாளர்கள்  தங்கள் தாணியங்களை மடம் அமைத்து வருவோர்க்கு உணவும் உறையும் வழங்கி வந்ததனால் மடத்துவெளியெனவும். போக்குவரத்து இல்லாத காலத்தில் வல்லமையுள்ளவர்கள் வள்ளங்களையமைத்து ஆழ்கடலை தாண்ட மக்களுக்கு உதவியதனால் வல்லன் பெரும் துறையாக மக்கள் வள்ளங்களில் பயணிக்க வசதிகள் கொண்டதாக விளங்கியது. நாட்டை காக்கும் வீரர்கள்வாழ்ந்ததனால் வீராமலை ஆகவும்.தாணியங்களை அரைக்கும் யந்திரங்களை மற்றவர்கள் அறிமுகப்படுத்தியதும் பெருமையாக நினைக்கும் நாம் நம்மவர்கள் முற்காலத்தில் எருதுகளதும் குதிரைகளதும் உதவியோடு நெல்லை அரிசியாகவும் அரிசியை மாவாகவும் மாற்றியதை பெருமையாக நினைப்பதில்லை. மாவை அரைத்ததனால் மாவுதிடல் எனவும்.பாணவிடையிலிருந்தவர்கள் கிழக்கே ஊரையமைத்ததனால் கிழக்கூர் எனவும் பெரும்காடாக காட்சியழித்ததனால் பெரும்காடு எனவும். கப்பல் மாலுமிகளுக்கு  செல்லும் இடத்தின் விபரத்தை கணிப்பதும்.காற்று மழை சூறாவளி போன்றவற்றையும் திசையையும் சொல்லவல்ல குறிசொல்பவர்கள் குடில் இருந்தமையினால் குறிகாட்டுவான் எனவும். புங்குடுதீவின் இறுதியில் இரு புட்டிகள் இருந்ததனால் இறுபிட்டியாகவும் காலப்போக்கில் அவை முறையே சிறுபிட்டி( சிவலப்பிட்டி). இறுபிட்டியாக மருவியதாககொள்பர். இவ்வாறு பல வரலாற்று பெயர்களைக்கொண்ட பல பகுதிகள் உள்ளன ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பதனால் பாணவிடை என்றபெயர் புறநானூறு காலத்து பெயர் என்பதை புறநானூற்றை கற்றறிந்தவர்களுக்கு தெரியும்.
16 பாடசாலைகளும்; வருடாவருடம் திருவிழாக்கள் நடைபெறும் 19ஆலயங்களும். 46 அதிகமான காவல் தெய்வங்கள் உள்ள ஆலயங்களும் காலத்தால் முந்திய சமாதிகளும் தானாக தோன்றிய சுயம்பு இலிங்கத்தை கொண்ட பழம்பெரும் ஆலயமும். பல கிராமமுன்னேற்ற சங்கங்களும்  12 மேற்பட்ட சனசமூகநிலையங்களும். பல நூல்நிலையங்களும் அரசியல் மன்றங்கள் பலவும் சைவசமய சங்கங்கள் பலவும்.ஆயிரத்திற்கு மேற்பட்ட எழுத்தாளர்களும் அதில் சாகித்திய பரிசு பெற்ற 5 எழுத்தாளர்களும். சிறந்த பேச்சாளர்கள் பலரையும கல்விமாண்களையும் பத்திரிகையாளர்கள் பலரையும் அறிவிப்பாளர்கள் பட்டிமன்ற விற்பன்ணர்கள். நாடகநடண கலைஞர்கள் விளையாட்டு வீரர்கள்.தூய அரசியல் மேதைகள் சேவைமாண்கள் தொழிலதிபர்கள்
பல ஆயிரம் ஆசிரியமணிகள் இவைபோன்ற பல்கலைவண்ணர்களையும் இவை எல்லாவற்றுக்கு மேலான பண்பான பல ஆயிரம் மக்கள் வாழ்ந்த  அந்த புங்கை மண்ணில்; இன்று சில நூறு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்  இந்த மண்ணை éர்வீகமாக கொண்ட மக்கள் அந்தகிராமத்தின் வெளியே பல இலட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருந்தபோதும் 1991 ஆண்டு தீவுப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டபோது அந்த மக்களை éர்வீகமாக கொண்டவர்களும் ஏணையவர்களும்  வாய்மூடிகளாக இருந்ததனால் அந்த அநுபவத்தை ர்.ழத்தின் ஏணையவர்களும் சந்திக்கவேண்டிவந்தது.இதிலிருந்து கற்றவை கருத்தில் கொண்டு ஒன்றுபட்டு உழைப்போம.;  
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போத்துகீச மதகுருவான போலோத்த திரிலதே புங்குடுதீவிலே  காலத்தால் முந்திய பழைய கட்டிட சிதைவுகள் காணப்பட்டதா குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அங்குவாழ்ந்த ஆண்கள் இலங்கையின் ஏனைய பகுதியினரைவிட உயரமாக இருந்ததாகவும் பகன்றுள்ளார்.
தொடர்ந்து எழுதினால் தனி நூல்வேண்டும் .வரலாற்றுக்கு ஆதாரம் தேவை என்பது உண்மை அதனால் ஆதாரம் இல்லை என்பதற்காக தெரிந்ததை மற்றவர்களோடு பகிர்வது தவறல்ல  எனவே இது ஒரு உறவோடு உரிமையோடு பகிர்ந்தவையே தவிர வேறொன்றல்ல.
உலகத்தை ஆள்பவர்கள் ஆங்கிலேயர் அவர்கள் பிறந்தது ஒரு தீவில்
அவர்கள் பிறந்த தீவிற்கு பல ஆயிரம் வருடம்முற்பட்டவை நமது தீவு
புங்குடுதீவு என்பது ஒரு இடத்தில்தான் இருக்கவேண்டுமென்றில்லை
கனடாவில் ஒரு புங்குடுதீவும் சுவிசில் ஒரு புங்குடுதீவும்
நம்மவர் உள்ள இடமெல்லாம் நமது கிராமம்  உதித்திட்டால் என்ன அதற்கு தடையாய் இருப்பது நாம் வாழும் நாட்டவர்களா? இல்லை நாமே எமது ஒற்றுமையின்மையே
ஒற்றுமையாய் இருந்திடுவோம் ஓராயிரம் தீவமைத்திடுவோம்.  
நன்றி
அன்பினால் உலகினை ஆள்வோம்
அரியபுத்திரன் நிமலன்

புங்குடுதீவு பழைய மாணவர் சங்க மலருக்காக இவ் நூலாசிரியரால் எழுதப்பட்ட ஆக்கத்தை மீள்பிரசுரம் செய்கின்றோம் .

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP