வினைதிறன் மிக்க பொருளாதார வளம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவர்களால் பனம் விதை நடுகை செய்யப்பட்டுள்ளது .
எனினும், சில வருடங்களில் புங்குடுதீவை சுற்றியுள்ள கரையோர பிரதேசம் முழுமையும் பனம் கூடலாக ஆக்கப்படும். அதற்காக யுத்த சூழலால் செயல் இழந்து போன சூழகம் (சூழலியல் மேம்பாட்டு அமைவனம்) அமைப்பினை பாடசாலை மட்டத்தில் மீண்டும் உயிரூட்டி இயக்கி எமது இலக்கினை அடையும் செயல்பாட்டில் இறங்கியுள்ளோம்.
விரைவில் அனைத்து பாடசாலை மாணவர்களையும் சூழகம் அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து, பனை நடுகை மட்டுமின்றி பயன் தரும் மரங்களையும், நிழல் தரும் மரங்களையும் ஊர் முழுவதும் நடுகை செய்யவுள்ளோம் என்று கழக செயற்பாட்டாளர்களான குகதாஸ், கவியரசன், மோகன், விஜய்ராகுலண் எனப் பலரும் தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி, புங்குடுதீவு மகா வித்தியாலய பிரதேசம் பசும் சோலையாய் மாற்றம் பெற இருக்கிறது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உள்ளூர் விதைகளைக் கொண்டு மாபெரும் நாற்று மேடை ஒன்று பள்ளி வளாகத்தினுள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.
இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர்ந்த எம் உறவுகளுடன் சேர்ந்து pungudutivu.info இம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றது !!
0 comments:
Post a Comment