புங்குடுதீவில் சூழகம் அமைபினரால் முன்னெடுக்கப்படும் மரம் நடும் நடவடிக்கை !
புங்குடுதீவு மகா வித்தியாலய 11ம் ஆண்டு மாணவன் செல்வன் கஜன் தலைமையில் நடைபெறும் அமெரிக்கன்மிசன் பாடசாலைக்கான மரநடுகை திட்டத்தின் இரண்டாம் கட்டம் இடம்பெறுகிறது. மஹொகனி (மலை வேம்பு இனம்) மரங்கள் நடுகை செய்யப்படுகின்றன. இப்பாடசாலையில் நடுகை செய்யப்படும் மரக்கன்றுகள் உரிய வளர்ச்சியை அடையும் வரையில் சூழகத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காளி கோயில் வளாகத்திலும் சூழகத்தினால் இன்று மரக்கன்றுகள் நடுகை செய்யப்ப்ட்டன.
இதேவேளை காளி கோயில் வளாகத்திலும் சூழகத்தினால் இன்று மரக்கன்றுகள் நடுகை செய்யப்ப்ட்டன.
0 comments:
Post a Comment