Thursday, September 5, 2013

ஐ நா சபை முன்பு தீக்குளித்து இறந்தவர் புங்குடுதீவை சேர்ந்த இரத்தினசிங்கம் செந்தில்குமரன்(40) ஆவார் .

ஐ நா சபை முன்பு தீக்குளித்து இறந்தவர் புங்குடுதீவை சேர்ந்தவரும் சுவிஸ் வலைச் மாநிலத்தை சேர்ந்தவருமான இரத்தினசிங்கம் செந்தில்குமரன்(40) ஆவார் .
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்...தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 40வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற ஜெனிவா ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று இரவு அவருக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இவர் தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஒரு தமிழீழ செயற்பாட்டாளர் என்றும் தெரியவருகிறது.
நேற்று அதிகாலை ஐ.நா. முன்றலில் தீக்குளித்த இவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்றுகாலை லவுசான் மாநகர சபை உறுப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவை செயலாளருமான த.நமசிவாயத்திடம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததுடன் இவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் காணப்பட்டதாகவும் எனவே இவர் தமிழராக இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்திருந்தனர்.

- www.pungudutivuswiss.com

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP