Saturday, March 16, 2013

மாறுதடம் திரைப்படத்தின் இயக்குனர் சக.ரமணன் பற்றி சில வரிகள்.

ஈழத்தின் மாவட்டத்தின் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட ரமணன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமானிய மகா வித்தியாலயத்திலும் உயர்கல்வியை புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் கற்றார்.
மிக இளம் வயதில் சுவிசுக்கு புலம் பெயர்ந்த இவர் மேலதிக கல்வியை சுவிசில் பெற்ற பின்னர் இசையில் நாட்டம் கொண்டு வயலின் இசைக்கருவியை முறைப்படி கற்று தேறினார் . பின்னர் கலைத்துறைக்குள் புகுந்து பல சாதனைகளை புரட்டி போட்டார் . நாடக கலையை அறிந்து தெரிந்து கொள்ள அவா கொண்டு புறப்பட்டவர் இன்று சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா எங்கணும் சிறந்த நாடக வாதி என்ற முத்திரையை பதித்துள்ளார் .பழைய தமிழ் நாடக முறைமைகளை மாற்றி புரட்சி செய்தார்.


மேற்கத்தைய நவீன நாடகவியலை முறைப்படி கற்க ஆரம்பித்தார்,காட்சிப்படுத்தல் ,ஒப்பனை மேம்படுத்தல் ,மேடை அலங்காரம் ,எளிமையான வழிமுறைகள் ,பின்னணி இசைப்படுத்தல். நவீன ஒளி அசைவு தோற்றுவாய் ,என் அத்தனை புதுமைகளையும் புகுத்தி தமிழ் நாடக உலகை மேம்படுத்தினார். இவற்றுக்கு துணையாக நடக்க காவலர் தாசியஸ் அன்டன் பொன்ராஜ் பாஸ்கரன் போன்றோரை ஒருங்கிணைத்து நாடகப் பாசறைகளை ஏற்படுத்தினார் அங்கே பல புதிய நடிகர்களை உள்வாங்கி பயிற்சி பட்டறைகளில் மெருகேற்றினார்.அத்தோடு நாட்டு கூத்து. ஓரங்க நாடகம் ,இசைவழி நாடகம் தெருவழி நாடகம் என பலவகை கலைப்படைப்புகளை பிரசவித்தார்.
ஜெனீவ ஐ நா சபை முன்றல்பேரணிகள் போன்ற தாயக நிகழ்வுகளை தனது தமிழுணர்வு மிக்க படைப்புக்களால் காலத்துக்கேற்ற கலை வெளிப்பாடுகளினால் எழுச்சிப் படுத்தினார்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினராக நீண்ட காலம் செயல் படும் ரமணன் அதன் நிகழ்வுகள் அனைத்தையும் செவ்வனே நிறைவேற்ற முன்னின்றவர். ஒன்றியத்தின் மேடைகளிலும் பண்டாரவன்னியன் என்ற சரித்திர நாடகத்தையும் அந்த ஆல மரத்தடியில் என்ற இலட்சிய நாடகத்தையும் அரங்கேற்றினார். புங்கைய்யூர் எஸ் ரமணன் என்னும் புனைபெயரில் இவரது நாடகங்கள் ஏராளம் ஐரோப்பா எங்கணும் மேடையேறி உள்ளன முக்கியமாக மேட் இன் ஸ்ரீலங்கா. இக்கு அக்கு பச்சை போன்றவை குறிப்பிடத்தக்கன.
குறும்பட முழு திரைப்பட தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்பவற்றிலும் உள் நுழைந்த ரமணன் பூப்பெய்தும் காலம் என்னும் சிறந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார். இன்னும் தமிழக திரைப்படமான அஜித்தின் அசல் என்ற படத்திலும் நடித்துள்ளார். பல நடிகர்களை இவர் பட்டை தீட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர். இவரது செவ்விகள் படைப்புகளை ஒலிபரப்பாத ஒளிபரப்பாத எழுதாத தொலக்காட்சிகள் வானொலிகள் ஊடகங்கள் இல்லை எனலாம்.
இவர் நடித்து அல்லது இயக்கி மேடையேறிய படைப்புகள் 
நாடகங்கள் ——————-
மேட் இன் ஸ்ரீலங்கா
சீர்கேடுகள்
வீட்டில வில்லங்கம்
இக்கு அக்கு பச்சை
வெளிக்கிடடி மீனாட்சி
பெத்தாலும் பெத்தேனடா
நான் ஒரு கரப்பான் பூச்சி
பண்டார வன்னியன்
அம்மையே அப்பா
கடலம்மா
மலையம்மா
எரிமலை பூக்கள்
வில்லுப்பாட்டு
அந்த ஆல மரத்தடியிலே
———————
புத்திமான் பலமாவான் 
சுவிஸ் திரைப்படம்
————————–
டாரியோ எம்
மாட்லி இன் லவ்
டெலிட்ராமா
——————–
வணக்கம் 
சுவிஸ் தொலக்காட்சி விவரணப்படம் 
—————————————————–
இன்றைய ஈழம் எஸ் எப் 1 தொலைக்காட்சி
நாட்டுக்கூத்துகள்
வீரன் வில்லியம்ஸ் தெல்
காத்தவராயன்
குறும்படங்கள் 
முடிவல்ல
பூப்பெய்தும் காலம்
தமிழக திரைப்படம்
அசல் (நடிகர்)
மன்மதன் அம்பு (தொழில் நுட்பம் )

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP