Tuesday, December 18, 2012

புங்குடுதீவு மருத்துவமனையில் நிரந்தர வைத்தியர் இல்லை .

புங்குடுதீவில் சகல வசதிகளையும் உள்ளடக்கக் கூடிய கட்டடங்களை கொண்ட மாவட்ட மருத்துவமனை ஒன்று உண்டு.
ஆனாலும் அங்கு வாழும் மக்கள் வைத்திய சேவையைப் பெறுவதற்கு நிரந்தர மருத்துவர் ஒருவர் இல்லாமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
இவ் வெற்றிடம் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் கொழும்பு, கண்டி மாவட்டங்களில் உள்ள காதார வசதிகள் ஏனைய மாவட்டங்களுக்கும் கிடைக்க வேண்டும். நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திலிருந்து அதியுயர் சுகாதார சேவையைப் பெறுவதற்காக கொழும்பை நோக்கி வரும் நிலை மாறி, அந்தந்த மாவட்டங்களில் அதியுயர் வைத்திய சேவையை பெறக் கூடிய நிலை உருவாக வேண்டும்.
குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் அனைத்து சுகாதார வசதிகளிலும் அதியுயர் முன்னேற்றம் தேவைப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இட நெருக்கடிகளைக் குறைப்பதற்கு வைத்தியசாலையின் சில பிரிவுகளையும், விடுதிகளையும் அயலிலுள்ள கிராமங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் இட நெருக்கடிகளைத் தவிர்த்திடலாம். போதனா வைத்தியசாலையிலிருந்து நகர்த்தப்படும் நோயாளர் பிரிவுகள் அயல் பிரதேசங்களில் அமைவதால் பிரதான வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்வதும், நோயாளர்களை இடம் மாற்றுவதும் சுலபமாயிருக்கும்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP