Sunday, November 25, 2012

எழுந்து வாடா பருதி! - சுவிஸிலிருந்து மதிமுகன்.


வல்வெட்டித்துறையவனுக்கு
தோளோடு தோள் நின்ற
ஊர்காவல் துறையவனுக்கு
வீரச்சொல் கட்டிப் புகழ் மாலை பாடுங்கள்
அவன் வீரத்தைப் புகழேணியில்
ஏற்றுங்கள்!

விடுதலைப் பட்டம் ஏற்றியவன்
மூச்சைத் தந்து விடுதலைப்
பட்டம் ஏற்றியவன்!
முச்சை அறுந்து விடாமல்
காப்பது நம் பொறுப்பு!

பிச்சையா கேட்கின்றௌம் தமிழீழம்
எமது பிறப்புரிமை!
இறப்பைத் தந்தேனும் எமது
பிறப்புரிமையை அடைந்தே தீர்வோம்!

எலும்புத் துண்டுக்காய்
நாயொன்று நக்கிப் போய் விட்டது
இன்னும் எத்தனை காலம் நக்குவாய்?
நக்குகிற நாய்க்கு செக்கென்ன! பருதியென்ன!

பருதியின் இரத்தச் சிதறல் பட்டாவது
உனக்கு வீரம்இ ரோசம் வந்தால்
அதுவே ஒரு திருப்பம்! ஏனெனில்
உனக்கும் சேர்த்துத் தான் விடுதலை!

கொண்ட கொள்கை மாறாத புலிகளே!
சிங்க நோக்குக் கொண்ட புலிகளாய் மாறுங்கள்
ஏனெனில் உங்கள் சேவை
தமிழீழத்தின் தேவை!

விடுதலைக்காய்
உயிரினும் உயரிய விடுதலைக்காய்
பாரீஸ் மண்ணிலே மீண்டும் ஓர் தலை தந்து
எம் உணர்வூக்குள் சுடரேற்றி
மறைந்தது பருதிச் சுடர்!

விடுதலையை விலை
கூவிச் சென்றது ஒரு தறுதலை
இம் மண்டபத்துள்ளும் அமர்ந்திருக்கலாம்!
இனங்காணுங்கள்.

அத்தறுதலைக்கும்
சேர்த்துத் தானே விடுதலை! தாயைச்
சகோதரியை விலை பேசி விற்கும்
தறிகெட்ட தறுதலை இருந்தென்ன
வாழ்ந்தென்ன அறுத்தெறி அதன் தலை!

பாதுகாப்புக் கருதி வந்த இடங்களில் கூட
உமக்குப் பாதுகாப்பில்லை!
எல்லை மீறித் தொல்லை தரும்
மர்மக் கொலைக் கரங்கள்!

பேரச்சமூட்டி இடர் மேல் இடர் தந்து
தொடர் அடிமைகளாய் வாழ வைக்கும் நிலை
இருப்பினும் நிலை தளரோம்!
தலைவன் காட்டிய வழியில்
பருதி போல் நிமிர்வோம்!

ஐரோப்பாவில் பருதியின் தாக்கம்
ஆறுமாத காலம் தான்!
எதிரிக்கோ பருதி இறக்கும் வரை
தாக்கம் தான்! துன்பப்பனி படர்ந்து
வாடுகிறௌம். பருதி எழுந்தால்
பனி விலகாதோ? எழுந்து வாடா
பருதி! எமக்குள் வாடா பருதி!

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP