Monday, May 21, 2012

உயர் திரு . வை. குமாரசாமி அதிபர் ( தியாகு வாத்தியார் ) அவர்கள்.

புங்குடுதீவு கிராமத்தில் சமூக சேவைக்காக தன்னை அற்ப்பணித்த ஆசிரிய பெருந்தகை உயர் திரு . வை. குமாரசாமி அதிபர் ( தியாகு வாத்தியார் ) புங்குடுதீவு -4

" தோன்றித் புகழொடு தோன்றுக அன்றேல் 
தோன்றிலும் தோன்றாமை நன்று " 

என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒப்ப தோன்றுதல் "என்பது எல்லா மனிதர்க்கும் பொருத்தமற்ற ஒன்றாகும் . இவ் மண்ணுலகில் நாம் மனிதனாகப் பிறந்தற்குரிய கடமைகள் நிறையவே உண்டு .

அதை உணர்ந்து வாழ்பவன் தான் மனிதன் . அவ்வாறு வாழ் வாங்கு வாழ்ந்தவர்கள் அரிதிலும் அரிதாகும் . ஆனால் எம் தாய் பூமியாகிய தமிழீழத்தின் கண் விளங்கும் புங்குடுதீவு மண்ணிலே 
பொது சேவைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பரம்பரை பரம்பரையாக இம்மண்ணில் மக்களின் பெருமையை எழுதிக்கொண்டே போகலாம் .போக்கு வரத்து கடல் வழியாக 
நடை பெற்ற காலம் போய் தரை மார்கமான போதும் எம் மக்களின் கல்விப்பணி இருண்ட நிலையிலேயே இருந்தது. இவ்விருளைப் போக்க கல்விச் சாலைகளின் வளர்ச்சியும் சமய வழிப்பாட்டின் நிலைகளும் வளர்ச்சி அடைய வேண்டிய கால கட்டமாக இருந்தது.இதன் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து சேவை புரிந்தவர்களுள் பெருமைக்குரியவராக வாழ்ந்தவர். திரு வை .குமாரசாமி ஆசிரியராவார் .தியாகு வாத்தியார் என்பது இவரது செல்லப் பெயர் .அப்பெயருக்கு தகுந்தற்போல வாழ்கையை நிர்ணயித்து ஆசிரியராகஇஅதிபராக இ தொண்டராக இபக்திப் பாடல்களைப் பாடும் பாடகராக இரப்போர்க்கு இல்லை என்று கூறாத வள்ளலாகஇ ஒரு பகுத்தறிவாளராக பஞ்சாயத்து தலைவராக வாழ்ந்த பெருமைக்குரியவர் . 

இவர் சாவகச்சேரியில் பிறந்து தனது கல்வியை சாவகச்சேரியில் பிரபல்யம் பெற்ற "றீபேர்க் " கல்லூரியில் கற்று அங்கு பயிற்றப்பட்டஆசிரியராக இருந்து தன் தாய் தந்தை வாழ்ந்த கிராமத்துக்கே தன் சேவை தொடர வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் .அவரின் அந்திம காலம் வரை இம்மண்ணில் சேவை புரிந்தவர் என்பது யாவரும் அறிந்த ஒன்றே . அறியாமையும் வறுமையையும் பயன்படுத்தி குடியேறும் கத்தோலிக்க மதத்துக்கு இருபிட்டி பகுதி பலியாகாமல் தடுத்து சேர் துரைசாமி வித்தியாசாலையை கட்டி எழுப்பிய பணியில்பங்கு கொண்டவர்களில் ஒருவராவார் . அக்காலத்தில் வீடுவீடாக சென்று சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று பாடம் சொல்லி கொடுத்த காட்சி இன்னும் மனக்கண்ணில் மறையாது நிற்கிறது . தான் கல்வி அறிவில் சிறந்து ஆசிரியராகவும் அதிபராகவும் விளங்கியதோடு மட்டும் அன்றி தான் பிறந்த தாயகம் சமயம் சமூகம் என்றெல்லாம் நாளும் பொழுதெல்லாம் சிந்தித்தவர் .இவர் தெய்வத் திருப்பணிகளிலும் சமய சமூக  பணிகளிலும் பொறுப்பு மனிதநேயம் வாய்ந்த பல பதவிகளை வகித்து எமது தீவக மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்.

தனது இனிய குரலால் தேவார திருமுறைகளை பண்ணோடு இசைத்து எல்லோர் இதயங்களையும் லயப்படுத்தி கொண்டவர் .தமிழின உணர்வு மிக்க இவரின் எழுச்சி கோலங்களை அன்று அடிகடி
நடந்த அரசியல் ஊர்வலங்களில் கேட்க கூடியதாக இருந்தது . எமக்கு தமிழ் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஊட்டிய ஆரம்மா தமிழ் இன விடுதலை இயக்கங்களுக்கு பேராதரவு நல்கி தமிழின அகிம்சை போராட்டங்களில் எல்லாம் பங்கு கொண்டவர். இவர் வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்களுடன் கூடி பாடசாலை வளர்ச்சிக்ககாக திட்டம் இடும் நேரங்களே அதிகம் எனலாம் . திரு பெரிய சபா அதிபர் அவர்கள் திரு முத்திலிங்கம் ஆசிரியர் .திரு குணரத்தினம் ஆசிரியர்இ திரு செல்வராசா (சாளி மாஸ்டர்) இதிரு கோபாலப்பிள்ளை ஆசிரியர் இதிரு கு .வி .செல்லத்துரை அதிபர் இசேர் துரைச்சாமி வித்தியாசாலையில் ஆங்கிலக் கல்வியை ஊட்டிய திரு.சுப்பிரமணிய செல்வரத்தினம் ஆசிரியர் போன்றோருடன் அடிகடி கூடி பேசி செயற்படும் திறன் மிக்கவர். அவர்களும் இவர் போன்றே சேவைக்குரிய பெருமைக்குரியவர்களாவர் .பதினாறு பாடசாலைகளை தொடங்குவதற்கு முன்னோடியாக உழைத்தவர்களில் இவறம் ஒருவராவர்.

இப்பகுதி மக்களுக்கு வாசிப்பு பயிற்ச்சியை கொடுத்து அவர்களில் அறிவிற்கு தீனி போட விரும்பி அப்பகுதி நலன் விரும்பிகளை இணைத்து 5 .2 . 1950 இல் இருபிட்டி சனசமுக நிலையத்தை உருவாக்கி அன்றாட பத்திரிகைகளையும் பிற மாத வார நூல்களையும் தருவித்து வழங்கியதுடன் அதற்கு தலைவராகவும் செயலாளராகவும் இருந்து நீண்ட நாட்கள் சேவை ஆற்றினார் . இவர் இருந்த காலத்தில் இருபிட்டி சனசமுக நிலையத்தில் விளையாட்டு விழாவும்இ பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது இருபிட்டி சனசமுக நிலைய கலை அரங்கோடு கூடிய கட்டிடம் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்தவர். கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் இருபிட்டி நாவலர் ஐக்கிய நாணய சங்கத்தின் செயலாளராகவும் இபின் தலைவராகவும் நீண்ட காலம் சேவை ஆற்றினார்.புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திலும் சேவை புரிந்தார். இருபிட்டி மூத்தநயினார் புலம் ஸ்ரீ விரகர்த்தி விநாயகர் ஆலய செயலாளர் ஆகவும் ஆலய வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டவர்..
தனது தாய் மாமனார் திரு பெரிய தம்பி கார்த்திகேசு அவர்கள் நாலாம் வட்டாரத்து அங்கத்தவராக இருந்த காலத்தில் அவர் மூலமாக பல வழிகளிலும் அப்பகுதி மக்கள் நலம் பெற வசதிகள் செய்து கொடுத்தார். தொண்டர் திருநாவுக்கரசு அவர்கள் வீதிகள் அமைக்கும் காலத்தில் தானும் தன் குடும்ப அங்கத்தவர்களுடன் இ சுற்றாடல் மக்களையும் இணைத்து கொம்மா பிட்டி வீதிஇநுணுக்கள் வீதிஇ காந்தி வீதி தொடக்கம் அருகாமையில் இருந்த அனைத்து வீதிகளையும் புனரமைப்பதுக்கு பல வழிகளிலும் உதவி வழங்கினார்.

சேர் துரைச்சாமி வித்தியாசாலை பழைய கட்டிடம் வீழ்ந்து விடுமோ என்ற அச்சம் கொள்ளும் வகையில் இருந்த பொது அரசாங்கத்திடம் பல முறை வாதாடி 1400 . ச .அடி கட்டிடம் அமைக்க அனுமதி பெற்றார் . அத்துடன் அதிபர் அலுவலகம் அமையுமாறு  1600 ச .அடி கட்டிடம் அமைத்து மேலதிக செலவை தான் ஏற்று அக்கட்ட்டத்தை நிறுவினார் . இக்கட்டிடத்துகான அத்திவாரகல்லை  கிராம சபை உபதலைவரும் நாலாம் வட்டார உறுப்பினரும் ஆகிய திரு பெரிய தம்பி கார்த்திகேசு நாட்டி வைத்தார். இன்றும் வைத்திலிங்கம் குமாரசாமி (தியாகு மாஸ்டர் )ஆசிரியர் பெயரால் அக்கட்டிடத்தில் பிள்ளைகள் கல்வி பயில்வது பெருமைக்குரியதே .

தனது இறுதி காலம் வரை இங்கு தொண்டாற்றி எம் மக்களுடன் வாழ்ந்து தெய்வத்துள் வைக்கப்பட்ட அமரர் அவர்களின் சேவையை நினைவு கூறிக்கொள்வோமாக .


திருமதி .பூங்கோதை பன்னிர்ச்செல்வம் (ஆசிரியை ) கனடா 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP