புங்குடுதீவு பெருங்காட்டுக்கு இதுவரை கிடைக்காத மின்சாரம்
புங்குடுதீவு பெருங்காட்டுச் சந்தியிலிருந்து குறிகாட்டுவான் துறை வரையான பகுதிக்கு இதுவரை மின்சார விநியோகம் வழங்கப்படாதமை குறித்து அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பகுதியில் வசித்து வருகின்றன. குறித்த பகுதிக்கு மின் விநியோகம் வழங்குமாறு அப் பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தபோதும், இதுவரை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப் பகுதிதிக்கு மின்விநியோகத்தை வழங்குவதற்காக மின் கம்பங்கள் கொண்டு செல்லப்பட்டு நடப்பட்டுள்ளன. எனினும் மின்சாரக் கேபிள் இணைப்புப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.
மின் விநியோகம் இல்லாமையால் இப் பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நயினாதீவு திருவிழாவுக்கு முன்னராவது இப் பகுதிக்கான மின் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment