Friday, April 27, 2012

அமரர் செல்லையா நடராசா அவர்கள் .

ஆண்டுகள் இரண்டாகி போனபோதும்
அருகிலிருக்கும் நினைவுகளே நிழலாய் தோன்றும்
பூண்டதொரு மறுஜென்மம் உண்டேயானால்
புவியிலெங்கள் உறவாக வேண்டுகின்றோம்!!


கள்ளமில்லா புன்சிரிப்பும் கனத்த அன்பும்
உள்ளமதில் உறுதியுடன் நிலைத்து நிக்க
செல்லுமிடம் எல்லாம் உங்கள் தோற்றம்
செகமதிலே தெரிகிறாய் இருப்பதேனோ !!

அன்பாலே எம்மையெல்லாம் கட்டிவைத்து
அரவணைப்பால் பாசமழை தன்னைக் காட்டி
இன்பமாய் இவ்வுலகில் உயர வைத்த எங்கள்
இணையற்ற தெய்வமே எங்குற்றீர்கள்!!

எந்நாளும் உங்களது நினைவில் தோய்ந்து
இவ்வுலகில் வாழும் வரை அழியா வண்ணம்
அப்பாவே இஉங்களை நாம் போற்றுகின்றோம்
அருகிலிருந்து வாழ்த்திடவே வேண்டுகின்றோம் !!

ஓம் சாந்தி .... ஓம் சாந்தி ....

என்றும் உங்கள் நினைவுகளுடன்


மனைவி,பிள்ளைகள் ,
மருமக்கள்,பேரபிள்ளைகள்,
பூட்டபிள்ளைகள்.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP