Friday, April 13, 2012

வேண்டும் வரம் அருளும் புனிதசவேரியார்.


சப்ததீவுகளில் ஒன்றான எழில்கொஞ்சி
விளையாடும் புங்குடுதீவில் கோவில்
கொண்டளுந்தருளி அருள் பாலித்து நிற்கும் புனித பிரான்சீஸ் சவேரியார் ஆலயம் புங்குடுதீவிலேபிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக எல்லோராலும் போற்றப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே .


துயரங்கள் தீர்ந்திட புனிதனை வேண்டினால் அருள்
நம்மை வந்து சேர்ந்திடும் என்ற இறை நம்பிக்கையோடு
வாழ்ந்திடும் பக்தர்கள் வாழ்வில் நல்வழியினைக்காட்டி நிற்கும் புனிதசவேரியார் வேண்டும் வரம் அனைத்தும் எல்லோர்க்கும்
நிறைவாய் கிடைப்பதனால்தான் என்னவோ
எம்மதமும் சம்மதம் என்று அனைவரும் அவரைப்போற்றி
புகழ்பாடி நிற்பதை நாம்கண்டு மகிழ்கின்றோம் .

புங்குடுதீவு புனித பிரான்சிஸ்சவேரியார்
ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது .நாட்டில் ஏற்பட்ட போர்ச்சுழல்
காரணமாகபலர் அவ்விடத்தைவிட்டுபுலம்பெயர்ந்துள்ளதினால். அவ்வாலயத்தை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.அதன்காரணமாகவேதேசத்துக்குள்ளானஆலயத்தை கண்ணுற்ற அப்பங்கு மக்கள் பங்குத்தந்தையுடன் கலத்துரையாடி புலம்பெயர்ந்து வாழ்கின்ற தங்களின் உறவுகளோடு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதை நாம் காண முடிகிறது...

மேலும் ஆலயவேலைகளை செய்து
முடிப்பதற்கு பெருந்தொகையான பணம்
தேவைப்படுகிறது . கரம் கொடுத்து
உதவவேண்டியது நம் ஒவ்வொருவருடைய
தார்மீகக் கடமையாக உள்ளது .
பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய பிதா சி.லியோ ஆர்ம் ஸ்ட்ரோங் அவர்களின் அயராத உழைப்பால்
இவ்வாலயம் கம்பிரத் தோற்றத்துடன் அழகுற
காட்சி அளித்து நிற்பதை நாம் காணக்கூடியதாக
உள்ளது .

இவ்வாலயத்தின் நுற்றாண்டுவிழா
12.08.2012இல் மிகவிமரிசையாக கொண்டடாப்படுவதட்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தற்போது ஆலைய வேலைகள் பணம் இல்லாத காரணத்தால் தடைப்பட்டிருக்கிறது .
எனவே புலத்தில் வாழ்கின்ற புனித சவேரியாரின்
பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பண உதவிகளை வழங்கி வேலைத்திட்டங்களை தொடரவேண்டும் என்பது அனைவருடைய ஆவலாக உள்ளது .
எனவே நுற்றாண்டு விழாவை நாம் காண்பதற்கு
முன்னதாக சகல வேலைகளும் நிறைவடைய
வேண்டும் என்பதில் பலர் ஆர்வம் கொண்டிருப்பதை
நாம் அறிய முடிகிறது .

மேலும் உதவிசெய்யவிரும்புவோர்கள் பங்கு
தந்தையின் வங்கிக்கணக்கு இலக்கத்திற்கு பணங்களை
அனுபபிவைக்கும் வண்ணம் அன்போடு கேட்டு
கொள்ளப்படுகின்றீர்கள்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே
என்று நம் முன்னோர் நமக்கு எடுத்துரைத்ததை
நினைவிருத்தி ஒவ்வருவரும் செயல் பட்டமையை
நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது .
புனித பிரான்சிஸ்சவேரியார் ஆலய
புரனமைப்பு வேலைகளை செய்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கிய அனைவருக்கும் பங்குத்தந்தை அவர்கள்
நன்றிகளை தெருவித்துக்கொள்கின்றார்.

எம் புனிதர் உங்களையும் ,
உங்கள் குடும்பங்களையும்
ஆசிர்வதித்து காத்தருள்வாராக....

எழுத்துருவாக்கம்
புங்கையூர் ராஜா
Holland Germany Rc.Makkal

Rev. Fr. Sinnathurai Leo Armstrong
Parish Priest
St. Francis Xavier Church, Punguditivu,
Jaffna, Sri Lanka

Landphone Nr. 0094 215100495
Handphone Nr. 0776181008
Skypename: Sinnathurai Leo Armstrong
E-mail: leo21@yahoo.com

Account Details:
A/c Name: The parish priest of st. Francis xavier´s Church
Bank: Commercial Bank
Jaffna Branch
A/c No. 8060066977

Sinnathurai Leo Armstrong
IC Number. 720520265X
Bishop Office Jaffna Sri Lanka




Facebook: http://www.facebook.com/profile.php?id=100002240042032

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP