புங்குடுதீவில் கமநல சேவைகள் நிலையம் திறந்து வைப்பு .
கடந்த 18.03.2012 ஆம் திகதி புங்குடுதீவில் கமநல சேவைகள் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையத்தினை கமநலசேவைகள் மற்றும் வனஜீவராசி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரிசிறி, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா ஆகியோருடன் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment